தெலுங்கானாவில் மீண்டும் "பழைய அம்பாசடர்" ஆட்சிதான்... எக்சிட் போல் முடிவுகள்
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் இரண்டாவது முறையாக சந்திரசேகர் ராவின் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 இடங்களுக்கான தேர்தல் இன்று நடந்து முடிந்தது. 1821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் இன்று மாலையில் இருந்து வெளியிட்டு வருகின்றன.

இந்தியா டிவி கணிப்பு
இந்தியா டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 79 முதல் 91 இடங்கள் வரை பெறும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கூட்டணி 21 முதல் 33 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாக இந்தியா டிவி கணித்துள்ளது. பாஜக 1 முதல் 3 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், ஏஐஎம்ஐஎம் 4 முதல் 7 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் இந்தியா டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில் தெரியவந்துள்ளது,

டைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸ் கணிப்பு
டைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 66 இடங்களை வெல்லும் என்றும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 37 இடங்களை வெல்லும் என்றும் கணித்துள்ளது. பாஜக கூட்டணி 7 இடங்களில் வெல்லக்கூடும் என டைம்ஸ் நவ்வின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவி மற்றும் ஜன்கி பாத்
ரிபப்ளிக் டிவி மற்றும் ஜன்கி பாத் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 50 முதல் 65 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 38 முதல் 52 இடங்களையும், பாஜக 4 முதல் 7 இடங்கள் வரையும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 8 முதல் 14 இடங்கள் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ் கணிப்பு
நியூஸ் எக்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 57 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 46 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் மற்றவர்கள் 10 இடங்களையும் வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications