பறக்கும் விமானத்தில் பணிப் பெண்களிடம் பாலியல் சேஷ்டை.. ம.பி. தொழிலதிபர் கைது
நாக்பூர்: மும்பை- நாக்பூர் விமானத்தில் பயணித்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், உணவு பரிமாறிய பணிப் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குப்தா (23). ஹார்டுவேர் பொருள்களை விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கோவாவில் தனது விடுமுறையைக் கழித்து விட்டு நாக்பூர் செல்ல மும்பை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தார். அப்போது அவர் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விமானப் பயணத்தின்போது உணவு பரிமாறிய இரு விமான பணிபெண்களின் கையை பிடித்து இழுத்ததாக இருவரும் விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் ஆகாஷ் குப்தா விமான நிலையத்தில் இருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தகவலறிந்த சோனேகான் போலீஸார் குப்தாவை கைது செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications