5 பிள்ளைகளும் பட்டினியில் வாடுவதை பார்க்க சகிக்காமல் பெண் விவசாயி தீக்குளித்து தற்கொலை
மும்பை: மகாராஷ்டிராவில் 5 குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியாமல் வறுமையில் வாடிய பெண் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள அம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் மனிஷா கட்கல்(40). விவசாயியான அவருக்கு 5 குழந்தைகள். கணவருடன் சேர்ந்து மனிஷா விவசாயம் செய்து வந்தார். வறட்சியால் வாடும் அந்த பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரக்ஷாபந்தன் பண்டிகை அன்று மக்கள் சந்தோஷமாக இருக்க மனிஷாவோ தனது குழந்தைகளுக்கு சாப்பிட உணவு இல்லையே என்ற கவலையில் இருந்தார். குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் தினம்தினம் தவிப்பதை விட தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார் மனிஷா.
இதையடுத்து அவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவர் உடல் கருகி பலியானார். மகாராஷ்டிராவில் விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் மராத்வாடா பகுதியைச் சேர்ந்தவர் தான் மனிஷாவும் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் இறந்துவிட்டாலும் அவரது கணவரும், குழந்தைகளும் தற்போதும் சாப்பிட உணவு இன்றி தவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications