மனைவியிடம் இயற்கைக்கு மாறான பாலியல் உறவு கொள்வது பலாத்காரம் கிடையாது: ம.பி நீதிமன்றம்
போபால்: மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதேபோல், மனைவியுடன் சேர்ந்து வாழாமல் தனியாக வாழும் போது, பாலியல் உறவு வைத்துக்கொண்டால் இது பலாத்காரம் ஆக கருதமுடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக கோத்வாலி காவல் நிலையத்தில் புகாரளித்தார். 2019 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட அந்த புகாரில் தங்கள் திருமணத்திற்கு பிறகு தன்னிடம் பலமுறை இயற்கைக்கு மாறான முறையில் கணவர் உறவு கொண்டார்.

கணவரது இந்த செயலுக்கு எதிராக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அந்த பெண்ணின் கணவருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை எதிர்த்து மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் பெண்ணின் கணவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு கொள்வது பலாத்காரம் ஆகாது எனக் கூறி கணவர் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா இந்த உத்தரவை பிறப்பித்தார். கடந்த புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில் நீதிபதி கூறியிருப்பதாவது:-
ஐபிசியின் 375வது பிரிவின் கீழ் ’பலாத்காரம் ’ என்பதன் திருத்தப்பட்ட சட்டத்தின்படி மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு கொள்வது என்பது பலாத்காரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேவேளையில், 15-வயதுக்கு கீழ் இல்லாத மனைவியுடன் எந்த வகையிலான பாலியல் உறவில் ஈடுபட்டாலும் அது பலாத்காரம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இங்குள்ள சூழல் அடிப்படையில் மனைவியின் சம்மதம் இன்றி இயற்கைக்கு மாறான உறவு கொண்டு இருப்பது அதன் முக்கியத்துவத்தை இழக்கிறது. திருமண பலாத்காரம் என்பது இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, சட்டப்படி திருமணம் செய்து கொண்ட மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு கொள்வது ஐபிசி 377-கீழ் குற்றம் ஆகாது. எனவே, இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது" என்று தீர்ப்பளித்துள்ளார்.
மனைவியுடன் சேர்ந்து வாழாமல் தனியாக வாழும் போது, பாலியல் உறவு வைத்துக்கொண்டால் இது பலாத்காரம் ஆக சட்டப்பிரிவு 376 பி -யின் கீழ் கருதமுடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications