ஹனிமூன் போன தம்பதி.. கணவனின் செயலால் ஆடிப்போய்.. போலீசுக்கு ஒரே ஓட்டம்.. இதுக்கு ஒரு முடிவு இல்லையா
கான்பூர்: திருமணம் முடிந்த 10 நாட்களிலேயே, இளம் மனைவி போலீசுக்கு போயிருக்கிறார்.. தன்னுடைய குடும்பத்தினர் மீது இளம்பெண் அளித்த புகாரானது, மிகப்பெரிய பரபரப்பையும், அதிர்வலையையும் உண்டுபண்ணி வருகிறது. போலீசாரும் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.
வரதட்சணை பெறுவதும், கொடுப்பதும் குற்றம் என்று பலமுறை அறிவுறுத்தியும்கூட, அதே தவறை பலரும் செய்து வருகிறார்கள்.. இதனால், வன்முறை துவங்கி மனித இழப்பு வரை நடந்து விடுகிறது.

கடந்த வாரம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு கொடுமை நடந்தது.. பெங்களூரு அர்பன் மாவட்டம் பவகடா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ருதி என்ற 34 வயது பெண், கிராம பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.. இவரது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு ஏற்படுத்தி கொண்டு, மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். கடைசியில், கிராம பஞ்சாயத்து தலைவி, லெட்டர் எழுதிவைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
எச்ஐவி தொற்று ஊசி
அதேபோல, 10 நாட்களுக்கு முன்பு, உத்தரபிரதேச மாநிலத்திலும் ஒரு வரட்சணை கொடுமை நடந்தது.. மணமகள் வரதட்சணை தரவில்லை என்பதற்காக, அவருக்கு எச்.ஐ.வி. தொற்று ஊசியை செலுத்தியிருக்கிறார் மாமியார்.. தற்போது, உடம்பில் தொற்று பரவி, உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அந்த மருமகள்.
இதோ இன்னொரு கொடுமை இதே உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.. மகாராஜ்கஞ்ச் அருகே உள்ள சாமன்கஞ்ச் அருகே வசிக்கும் டாக்டர் ரத்னேஷ் குப்தா என்பவருக்கு கடந்த பிப்ரவரி 12ம் தேதி திருமணம் நடந்துள்ளது. ஆனால், திருமணம் முடிந்த வெறும் 10 நாட்களிலேயே அந்த பெண், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுவிட்டார்.
வரதட்சணை கொடுமை
சதார் கோட்வாலி போலீஸில் மணப்பெண் அளித்த புகாரில், "எனக்கு திருமணம் முடிந்து, மகிழ்ச்சியாகத்தான் கணவர் வீட்டுக்குள் நுழைந்தேன். ஆனால், கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு மிக மோசமாக தாக்கப்பட்டேன். என்னுடைய பெற்றோரிடம் இதை பற்றி சொன்னதற்கு, என்னை அமைதிப்படுத்த முயன்றார்கள்.. ஆனாலும் மறுபடியும் இதே வரதட்சணை பிரச்சனை வெடித்தது.
கடந்த பிப்ரவரி 19ம்தேதி, என்னுடைய கணவருடன் தேனிலவுக்காக கோவா சென்றேன்.. அந்த ஹனிமூனிலும் ஏராளமான தொந்தரவுகளை எனக்கு தந்தார்.. தேனிலவு சென்ற இடத்தில் கோவாவில் நள்ளிரவில் அறையில் வைத்து என்னை கடுமையாக தாக்கினார.. ஒருகட்டத்தில் என்னுடைய கழுத்தை நெரித்தும் கொல்ல பார்த்தார்" என்று புகாரில் கூறியுள்ளார்.
விரைவில் கைதாக வாய்ப்பு
கோவா சம்பவத்தை அந்த பெண் தன்னுடைய பெற்றோரிடம் சொன்ன பிறகுதான், அவர்கள் மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்களாம்.. இப்போது, கணவர், மாமியார் உட்பட 7 பேர் மீது மணப்பெண் வரதட்சணை புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின்பேரில் வரதட்சணை துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கையில் எடுக்கப்படும் என்றும் காவல் கண்காணிப்பாளர் சோமேந்திர மீனா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications