கழுத்தில் தாலிகூட ஏறல.. இரவில் மணமகன் செய்த சம்பவம்.. சப்பாத்தியை இன்னும் காணோம்? அந்த பொண்ணு யாரு
லக்னோ: உத்தரபிரதேசத்தில் விடிந்தால் திருமணம்.. ஆனால், அதற்கு முன்தினம் இரவு, மாப்பிள்ளை செய்த காரியம், மணமகள் குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள். என்ன நடந்தது?
உத்தரப்பிரதேசத்தில் திருமண வரவேற்பின் போது, உணவு பரிமாற தாமதமானதால், கோபமடைந்த மணமகன் வெளியேறி, மறுநாள் வேறு பெண்ணை திருமணம் செய்த சம்பவம் நடந்து உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தில் ஹம்திபுர் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வரும் இளைஞர் பெயர் மெக்தாப்... இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயமானது.
திருமண வரவேற்பு: கடந்த 22ம் தேதி மாலை, பெண் வீட்டில் திருமண வரவேற்பு தடபுடலாக நடந்தது... எனவே, மணமகன் வீட்டாரை, பெண் வீட்டினர் விழுந்து விழுந்து கவனித்து கொண்டிருந்தனர்.. வடமாநிலத்தில் இனிப்பு வகைகள் மிகவும் முக்கியமான உணவு என்பதால், மணமகன் வீட்டாரை வரவேற்று இனிப்புகளை பரிமாறி உபசரித்தனர். பிறகு இரவு உணவுக்கான ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, பந்தியில் மாப்பிள்ளை வீட்டினர் சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருந்தனர்.. ஆனால், சப்பாத்தி வருவதற்கு சற்று லேட்டாகிவிட்டது. இதனால், மாப்பிள்ளை வீட்டினர், மணமகள் குடும்பத்தை சரமாரியாக திட்டினார்கள்.. பிறகு மண்டபத்தை விட்டும் வெளியேறினார்கள்..
ஆத்திரம்: இந்த விஷயத்தை கேள்விப்பட்டு மாப்பிள்ளைக்கும் கோபம் வந்துவிடடது. தன்னுடைய சொந்தக்காரர்களை பெண் வீட்டினர் அவமானப்படுத்திவிட்டதால் ஆத்திரமடைந்த மணமகன், இரவோடு இரவாக மணப்பெண் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.. அத்துடன் இன்னொரு உறவுக்கார பெண்ணை அப்போதே கல்யாணமும் செய்து கொண்டார்.
இந்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த மணப்பெண் வீட்டார், கடந்த 24ம் தேதி போலீசில் புகார் தந்தனர்.. ஆனால், இந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எதுவுமே எடுக்கவில்லை.. இதனால், மாவட்ட எஸ்.பியை சந்தித்து பெண் வீட்டினர் மனு அளித்தனர்.
புகார் மனு: அந்த மனுவில், "திருமணத்திற்காக, 1.5 லட்சம் ரூபாய் வரதட்சணை உட்பட 7 லட்சம் ரூபாய் செலவு செய்திருந்த நிலையில், திருமணத்தை கலாட்டா செய்து நிறுத்தி விட்டனர். இது தொடர்பாக மணமகன் குடும்பத்தினர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.. சப்பாத்தி லேட்டாகிவிட்டதால், திருமணமும் நின்று, மாப்பிள்ளை இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்துள்ளது, உத்தரபிரதேசத்தில் பரபரப்பை தந்து வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications