''நாடு அனைவருக்கும் சொந்தம்''.. மம்தா பானர்ஜி கைப்பட எழுதிய பாடல்.. பேஸ்புக்கில் வைரல்.. வீடியோ!
கொல்கத்தா: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி மம்தா பானர்ஜி தனது கைப்பட எழுதிய சுதந்திர தின பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
சென்னை ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு சிறப்புரையாற்றினார். இதேபோல் அனைத்து மாநில முதல்வர்களும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்கள்.

மம்தா பானர்ஜி
இதேபோல் அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் நமது தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் தேசியக்கொடி ஏற்றி மக்களிடம் உரையாற்றினார். இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி மம்தா பானர்ஜி கைப்பட எழுதிய சுதந்திர தின பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாடு அனைவருக்கும் சொந்தம்
''தேஷ் டா சோபர் நிஜர்" (இந்த நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது) என்றும் தொடங்கும் அந்த பாடலை எழுதியுள்ள மம்தா பானர்ஜி, தனது முகநூல் பக்கத்தில் இந்த பாடலை பகிர்ந்துள்ளார்.பெங்காலி கலைஞர்களான இந்திரனில் சென், மோனோமோய் பட்டாச்சார்யா, த்ரிஷா பருய் மற்றும் தேபோஜோதி கோஷ் ஆகியோர் பாடலை பாடியுள்ளதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

அரசியல் தலைவர்கள் படங்கள்

சுமார் 4 நிமிடம் 3 நொடிகள் ஓடும் இந்த பாடல் காட்சியில் முதலில் நமது தேசியக்கொடி இடம் பெறுகிறது. இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்களின் படங்கள், ஆன்மிக தலைவர்களின் படங்கள், நாட்டின் கலாசாரா விழாக்களின் தொகுப்பு, மம்தா பானர்ஜியின் நலத்திட்ட உதவிகள், பேரணி உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

குரலை உயர்த்த வேண்டும்
இந்த நிலையில் இன்று காலை டுவிட்டரில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி, ''75-வது சுதந்திர தினத்தன்று, நமது சுதந்திரத்தை நசுக்குவதை நோக்கமாகக் கொண்ட அனைத்து சக்திகளுக்கும் எதிராக குரலை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைவோம். இந்த நாளுக்காக நீண்ட மற்றும் கடினமான போரை நடத்தியவர்களின் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது'' என்று கூறியுள்ளார்.

மோடி-மம்தா மோதல்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பெரும் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. ''மத்திய பா.ஜ.க அரசு மக்களின் சுதந்திரத்தை ஒடுக்குகிறது. நாட்டில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. சர்வாதிகாரம் போல் இந்த ஆட்சி செயல்பட்டு வருகிறது'' என்று மம்தா பானர்ஜி அடிக்கடி குற்றம்சாட்டி வருகிறார்.

நெட்டிசன்கள் கருத்து
இந்த நிலையில் மம்தா பானர்ஜி எழுதிய ''இந்த நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது'' என்ற பாடல் '' ''இந்தியா குறிப்பிட்டவர்களுக்கு மட்டும்சொந்த கிடையாது. அனைவருக்கும் சொந்தம்'' என்று முழுக்க, முழுக்க பா.ஜ.க.வையும், மோடி அரசையும் எதிர்க்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் மம்தா பானர்ஜியை தாக்கியும்,. பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து கூறி வருகினற்னர்.

Click it and Unblock the Notifications