என்னாச்சுங்க இந்த சுகோய்க்கு.. 3 வருடத்தில் 69 கோளாறு.. இதுவரை 7 விமானங்கள் காலி..!
டெல்லி: இந்தியாவின் பெருமைக்குரிய, அதை விட முக்கியமாக, முதன்மையான தாக்குதல் போர் விமானம் சுகோய் 30 ரக போர் விமானங்கள்தான். ரஷ்ய தயாரிப்பு. ஆனால் இது இந்தியாக்கு வந்தது முதலே தலைவலிதான். எத்தனை எத்தனை ரிப்பேர்கள். இதுவரை 7 விமானங்கள் விழுந்து நொறுங்கியுள்ளன.
1997ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது சுகோய். பிரான்ஸின் மிராஜ் போர் விமானங்களுக்கு பதிலாக இதை சேர்த்தனர். ஆனால் சேர்த்தது முதலே தகராறாகவே இருந்து வருகிறது.
அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது சுகோய் விமானங்களின் அடையாளமாகவே மாறிப் போய் விட்டது. "வண்டி"யை எடுத்தாலே ரிப்பேர்தான். என்ஜின்கள்தான் இந்த விமானத்தின் மிகப் பெரிய துயரமாக உள்ளன. இந்தியாவின் பெருமைக்குரிய போர் விமானம் இப்படி தொடர்ந்து சறுக்கலைச் சந்தித்து வருவது கவலை தருவதாக உள்ளது.

1997 முதல்
இந்தியாவில் 1997ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி சுகோய் 30 எம்கே போர் விமானம், நமது விமானப்படையில் சேர்க்கப்பட்டது. அதன் பிறகு அதன் மேம்படுத்தப்பட்ட விமானமானது 2000மாவது ஆண்டு சேர்க்கப்பட்டது.

என்ஜின் பிரச்சினை
சுகோய் விமானம் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது முதலே சிக்கல்தான். குறிப்பாக என்ஜின் பழுது அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதற்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.

7 விமானங்கள் சேதம்
இந்தியாவிடம் மொத்தமாக 240 சுகோய் விமானங்கள் உள்ளன. அதில் இதுவரை 7 விமானங்கள் இது போல விபத்தில் சிக்கி சேதமடைந்துள்ளன. இது பெரும் கவலைக்குரியதாக மாறியுள்ளது.

போரில் சிக்காமல் சேதம்
இத்தனைக்கும் போரில் சிக்கி எந்த விமானமும் சேதமடைந்ததில்லை. விபத்துக்குள்ளாகி விழுந்துதான் இத்தனை சேதமும். இதுதான் கவலை தருகிறது. உலக அளவில் சிறந்த போர் விமானங்களில் ஒன்று சுகோய்.

கூட்டுத் தயாரிப்பு
உண்மையில் சுகோய் போர் விமானங்களை ரஷ்யாவிடம் உரிமம் பெற்று பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் இந்தியாவே தயாரிக்கிறது. குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கையில் மட்டும் ரஷ்யாவிடமிருந்து நாம் பெறுகிறோம்.

3 வருடங்களில் 69 விபத்துகள்
கடந்த 3 வருடங்களில் மட்டும் சுகோய் போர் விமானங்கள் 69 விபத்துகளைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக என்ஜின் பிரச்சினை குறித்த கவலை மேலும் அதிகரித்துள்ளது.

80 பேர் பலி
கடந்த 2011ம் ஆண்டு முதல் இதுவரை நடந்துள்ள விமான மற்றும் ஹெலிகாப்டர் விபத்துக்கள் மூலம் இந்திய விமானப்படை 80 பேரை இழந்துள்ளது. தனிப்பட்ட முறையில் விமானப்படைக்கு மிகப் பெரிய இழப்பாகும் இது. காரணம், ஒவ்வொரு வீரரையும் தரமிக்கவராக உருவாக்க மிகப் பெரிய அளவில் செலவிடுகிறது விமானப்படை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பேர்ட் பார்ட்ஸ் கிடைப்பதில்லை
சுகோய் விமானங்களின் பழுதை சரி செய்ய உரிய வசதிகள் நம்மிடம் போதி அளவில்லை. உதிரி பாகங்கள் போதிய அளவில் விரைவாக கிடைப்பதில்லை. பராமரிப்பும் சரியில்லை. இதனால்தான் அதிக அளவிலான விபத்துக்களைச் சந்திக்க நேரிடுகிறது. பராமரிப்பு தொடர்பாக ரஷ்யாவுடன் ஒரு புது ஒப்பந்தம் போட்டுள்ளது இந்தியா. நிலைமை மேம்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications