டோணியை குறை சொல்வதா?: ட்விட்டரில் யுவராஜின் தந்தையை திட்டும் மக்கள்
சென்னை: கேப்டன் டோணி மீது யுவராஜ் சிங்கின் தந்தை குற்றம் சாட்டியுள்ளது பற்றி தான் பலர் ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தனது மகன் இடம்பெறாததற்கு கேப்டன் டோணி தான் காரணம் என கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் குற்றம்சாட்டியுள்ளார். டோணி தனிப்பட்ட பிரச்சனையை மனதில் வைத்து யுவராஜ் சிங்கை அணியில் சேர்க்கவிடாமல் செய்துவிட்டார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்கள் ட்விட்டரில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.
|
தந்தைகள்
அனைத்து தந்தைகளும் தனது மகனின் பிரபலமான நண்பர் மீது குற்றம் சாட்டுகின்றனர். முன்பு ஸ்ரீசாந்தின் தந்தையும் டோணி மீது தான் குற்றம் சாட்டினார் என கேட் ஃபிஷ் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
குழந்தை போன்று
சின்னபுள்ளதனமாக நடந்து கொள்வதை நிறுத்துங்கள்... மகன் பக்குவமாக நடக்கிறார்...அணியை தேர்வு செய்ய நினைத்தால் தேர்வாளர் ஆகுங்கள்...#YograjSingh என ராகுல் கோஷல் தெரிவித்துள்ளார்.
|
ஓவர்
யோக்ராஜ் சிங் ஓவராக நடந்து கொள்கிறார். ஆனால் யுவராஜோ சிறப்பான வீரர். அவரின் தந்தை இப்படி செய்திருக்கக் கூடாது. கவனத்தை ஈர்க்க விரும்புகிறார் என பிரயாக் தெரிவித்துள்ளார்.
|
டோணி
டோணியின் தலைமை திறன் பாதிக்கப்பட்டால் அதற்கு யோக்ராஜ் சிங்கின் குற்றச்சாட்டு தான் காரணம்...எங்களுக்கு உலகக் கோப்பை வேண்டும்...நாங்கள் டோணியை ஆதரிக்கிறோம் என்று யஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
|
யோக்ராஜ்
இந்தியா பாகிஸ்தானை எப்படி வீழ்த்தியது என்று யோக்ராஜ் சிங் கவலைப்படுகிறாரோ?. சர், நம்மிடம் திறமையாளர்கள் உள்ளனர்(திறமையாளர்கள் என்றால் அது யுவராஜ் மட்டும் அல்ல) என ஒருவர் கோஹ்லியின் பெயரில் ட்வீட் செய்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications