சிறு திருடனாக இருந்து தாவூத்துக்கே சவால்விடும் நிழலுலக தாதாவாக வளர்ந்த சோட்டா ராஜன்
மும்பை: சிறு திருடனாக இருந்த சோட்டா ராஜன், தாவுத் இப்ராஹிமுக்கே சவால்விடும் நிழலுலக தாதாவாக உருவானவர்.
மும்பையின் செம்பூர், திலக்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜன் நிகலஜ். சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தி வந்தார். சககார் சினிமாவிலும் வேலை பார்த்துள்ளார். அதன்பிறகுதான் படா ராஜன் என்ற தாதாவின் பழக்கம் இவருக்கு கிடைத்தது. கொலை, கொள்ளைகளில் ஈடுபட தொடங்கினார். படா (பெரிய) ராஜனின் சிஷ்யன் என்பதால் சோட்டா (சிறிய) ராஜன் என்ற பட்டப்பெயரை ஈட்டினார்.

படா ராஜன் எதிர் கோஷ்டியால் கொலை செய்யப்பட்டதும், அந்த இடத்துக்கு சோட்டா ராஜன் வந்தார். இதன்பிறகு மும்பையை கலக்கிய தாவூத் குரூப்புடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தார். 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, சோட்டாராஜன் மற்றும் தாவூத் இடையே பிரிவினை ஏற்பட்டது. இருவரது மதமும்தான் இந்த பிரிவினைக்கு காரணம் என்று கூறப்பட்டது.
இதன்பிகு சோட்டா ராஜன் மற்றும் தாவூத் இருவருமே துபாய்க்கு தப்பிச்சென்றனர். குண்டுவெடிப்பு மற்றும் 15க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் சோட்டா ராஜன் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 2000வது ஆண்டில், பாங்காங் நகரில் ஒரு ஹோட்டலில் வைத்து, சோட்டா ராஜனை தீர்த்துக்கட்ட தாவூத் இப்ராஹிமின் வலதுகரமாக உள்ள சோட்டா ஷகீல் முயன்றார். ஆனால் அதில் ராஜன் தப்பினார்.
இன்டர்போல் போலீசாராலும் தேடப்பட்டு வந்தார் சோட்டா ராஜன். இந்நிலையில்தான் தற்போது இந்தோனேஷிய நாட்டின் பாலி பகுதியில் சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications