போலி சான்றிதழ் விவகாரத்தில் கைதான அமைச்சர் ஜிதேந்தர்சிங் தோமர்- டெல்லி அரசுக்கு சிக்கல்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: போலி கல்வி சான்றிதழ் சமர்ப்பித்ததாக டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்தர்சிங் தோமர் கைது செய்யப்பட்டுள்ளது டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் உள்துறை, சட்ட அமைச்சர் பொறுப்பு வகித்து வருபவர் ஜிதேந்திரசிங் தோமர். இவர் போலி கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

Who is Jitendra Singh Tomar?

இந்த வழக்கில் தற்போது ஜிதேந்திரசிங் தோமர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் டெல்லி அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே ஜிதேந்திரசிங் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆளும் ஆத்மி அரசு குற்றம்சாட்டியுள்ளது.

சர்ச்சையை கிளப்பியிருக்கும் ஜிதேந்திரசிங் தோமர் பற்றிய சில தகவல்கள்..

  • டெல்லியின் திரிநகர் தொகுதியின் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தோமரின் வயது 49.
  • உத்தரப்பிரதேசத்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தவர் தோமர்; டெல்லி மற்றும் உ.பி.யில் பள்ளி படிப்பு முடித்தவர்.
  • 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்தார். அப்போது திரிநகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
  • 2015ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்த நந்த் கிஷோரை 22,311 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் தோமர்.
  • டெல்லியில் 17 ஆண்டுகாலமாக வசித்து வருகிறார் தோமர்.
  • தோமரின் சொத்து மதிப்பு ரூ 1,07,24,369.
  • பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த தோமர், 1999ஆம் ஆண்டு பீகார் பாகல்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்ததாக சான்றிதழை சமர்ப்பித்திருந்தார்.
  • இந்த சான்றிதழ் போலியானது என வழக்கு தொடரப்பட்டது. அப்போது பீகார் பல்கலைக் கழகமும் தோமர் சட்டப் படிப்பு படித்ததற்கான சான்றிதழை வழங்கவில்லை எனக் கூறியிருந்தது.
  • இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றமும் தோமருக்கு விளக்க நோட்டீசை அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் இன்று தோமர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+