அலற வைச்சிட்டாரே "தேப்பர்மா".. தட்டித்தூக்குமா பாஜக.. விட்டதை பிடிப்பார்களா தோழர்கள்.. பரபர திரிபுரா
திரிபுராவில் இன்று நடக்கும் சட்டசபை தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது
அகர்தலா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் ஒரே கட்டமாக 60 சட்ட சபை தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.. இதையடுத்து, திரிபுராவை யார் கைப்பற்றப்போகிறார்கள் என்ற ஆர்வம் கிளம்பி உள்ளது.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அப்போதிருந்தே எதிர்பார்ப்புகள் எகிறி விட்டன.
முதல் கட்டமாக இன்று, திரிபுரா மாநிலம், தேர்தலை சந்திக்கிறது. 60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

போட்டி
திரிபுராவில் இப்போது 4 முனைப்போட்டி நிலவுகிறது... ஆளும் பாஜக-ஐபிஎப்டி கூட்டணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி மற்றும் மாநில கட்சியான திப்ரோ மோத்தா கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என மொத்தம் 4 முனை போட்டி நிலவுகிறது. பாஜக 55 இடங்களிலும், கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 5 இடங்களிலும் போட்டியிடுகிறது.. அதேபோல, இன்னொரு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

போராட்டம்
மாநில கட்சியான திப்ரா மோத்தா 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதுதவிர திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும் போட்டியிடுகிறது... எனவே விட்டதை பிடிக்க கம்யூனிஸ்ட்கள் போராடி கொண்டிருக்கிறார்கள்.. தொடர்ந்து 25 வருட காலமாக தக்க வைத்து வந்த, இடதுசாரி ஆட்சி, 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது முடிவுக்கு வந்தது.. அம்மாநிலத்தை பாஜக தட்டி தூக்கி ஆட்சியில் அமர்ந்தது.. அதுவும், 51 இடங்களில் போட்டியிட்டு 36 இடங்களில் மாஸ் வெற்றியை பெற்றிருந்தது..

பாஜக நட்டா
இந்த முறை பாஜக 55 இடங்களிலும் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இப்போதும் அதே ஆட்சியை தக்க வைத்து கொள்ள கடுமையாக போராடுகிறது... இதற்காகவே, இந்த மாநிலத்தில் பிரச்சாரத்துக்காக டெல்லி தலைவர்கள் பிரத்யேக கவனத்தை செலுத்தினார்கள்.. பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் திரிபுராவுக்கு வந்து சென்றபடியே இருந்தனர்..

அமித்ஷா
"பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சிதான் வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் கொண்டுவந்தது.. வன்முறை, மிரட்டல், பயம் ஆகியவற்றிலிருந்து திரிபுரா மாநிலத்தை காப்பாற்றியதே பாஜகதான்" என்ற பிரதமர் மோடியின் பிரச்சாரம் கவனத்தை பெற்றிருந்தது. பாஜக, ஐபிஎப்டி 2 கட்சிகளும் சீட்களை பகிர்ந்து கொண்டு, கூட்டணி வைத்தாலும்கூட, பாஜகவுக்குள் சில அதிருப்திகள் எழத்தான் செய்தது.. சீட் கிடைக்காதவர்கள் சுயேட்சையாக களத்தில் இறங்கிவிட்டனர்.. அதாவது, கஞ்சன்பூர் தொகுதியில் ஐபிஎப்டி தலைவர் பிரேம் குமார் ரியாங் களமிறங்க உள்ளநிலையில், இதே தொகுதியில் இவரை எதிர்த்து ராமச்சந்திரகாட் என்பவர் போட்டியிடுகிறார். இவர் யார் என்றால், பாஜகவில் சீட் கிடைக்காமல், சுயேட்சையாக நிற்பவர்.. இப்படி சுயேட்சைகள் காரணமாக பாஜகவின் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.

சிக்கல் பாஜக
இன்னொரு சிக்கலும் பாஜகவுக்கு இங்கு உள்ளது.. வழக்கமாக தேர்தல் அறிவிப்புகளில், அதாவது இலவசங்களில் ஆர்வம் காட்டாத பாஜக, பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை இந்த முறை வெளியிட்டுள்ளது.. குறிப்பாக, பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களில் பெண் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையின் பெயரில் ரூ.50,000-க்கு பத்திரம் வழங்கப்படும், கல்வியில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி தரப்படும், பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் அனைத்துப் பயனாளிகளுக்கும் 2 இலவச எல்.பி.ஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் இப்படியெல்லாம் அறிவிப்புகளை வெளியிட நேரும் அளவுக்கு களத்தில் லேசான பதற்றம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கூட்டணி
பாஜகவுக்கு அடுத்தபடியே, இழந்த ஆட்சியை மறுபடியும் கைப்பற்றியே தீருவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கி உள்ளது.. இதற்காகவே, தன்னுடைய அரசியல் எதிரி என்றெல்லாம் பார்க்ககாமல், காங்கிரசுடனும் இணைந்து களவாட தயாரானது.. 60 இடங்களில் 43 இடங்களை தன் கைவசம் வைத்துக்கொண்டு, 13-ஐ காங்கிரசுக்கு சிபிஎம் ஒதுக்கி தந்துள்ளது.. சிபிஐ - 1, புரட்சிகர சோசலிஸ்டு 1, பார்வர்டு பிளாக் 1. சுயேச்சை 1 என மற்ற சீட்களையும் பிரித்து தந்துள்ளது...

ராகுல் யாத்திரை
மேலும், பழங்குடியினர் தொகுதிகளையும் குறிவைத்தே காங்கிரஸின் தேர்தல் வியூகம் அமைந்தது.. அதனாலேயே காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் சாதகமாகலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. போதாக்குறைக்கு ராகுலின் யாத்திரை, பெரும் வரவேற்பை பெற்று தந்துள்ளதும், காங்கிரசுக்கு பலமாக இருக்கும் என்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும், முந்தை தேர்தல்களைவிட, இந்த முறை வாக்கு சதவீதம் அதிகரிக்கவே காங்கிரசுக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் பாஜக, காங்கிரஸ் என பிரதான தேசிய கட்சிகளுக்கே ஒரு கலக்கம் இருந்து வருகிறது என்றால், அது தேப்பர்மாவை பார்த்துதான்.. இது ஒரு புதிய கட்சியாகும்..

ரீ-என்ட்ரி
இந்தக் கட்சியின் தலைவராக பிரத்யோத் பிக்ராம் மாணிக்ய தேப்பர்மா உள்ளார். இவர் காங்கிரஸிடல் இருந்தவர்.. தலைமை பொறுப்பையும் வகித்தவர்.. ஆனால், ஊழல்வாதிகளை கட்சியில் சேர்க்குமாறு காங்கிரஸ் தன்னை கட்டாயப்படுத்துகிறது என்று பரபரப்பை கிளப்பி, 2019ல் கட்சியில் இருந்து வெளியேறி, திப்ரா மோதா என்ற பெயரில் புது கட்சியை தொடங்கினார்.. இந்த கட்சி தான் தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது.. திரிபுரா தேர்தல் வரலாற்றில், தேர்தல் என்றாலே அது காங்கிரஸ் + சிபிசி(எம்) கட்சி இடையேதான் என்றிருந்தது.. 2018-ல் பாஜக என்ட்ரி தந்து மிரள வைத்தது. பின்னர், திரிணமூல் காங்கிரஸ், அதற்கு பிறகு, திப்ரா மோதா என கட்சிகள் பெருகிவிட்டதுடன், பலத்தையும் பெற்றுள்ளன..

தேப்பர்மா களம்
இதில் தேப்பர்மா மிகுந்த கவனத்தை பெறுகிறார்.. காரணம், அசாம், மிசோரம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் திப்ரா பழங்குடியினர் பகுதிகளை இணைத்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பதே தேப்பர்மாவின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது... இந்த ஒரு கோரிக்கையை வைத்துதான், பழங்குடியினர் பகுதிகளில் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்.. திரிபுரா மக்கள் தொகையில் 31 சதவீதம் பேர் பழங்குடியினர் என்பதால், மொத்தம் 42 இடங்களில் தேப்பர்மா கட்சி களம் காண்கிறது..

தேப்பர்மா
இவர் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் என்பதால், பிரச்சாரங்களில் ஜனகூட்டத்தை அதிகம் காண முடிந்தது.. இதுதான் பாஜகவின் இன்னொரு கலக்கத்துக்கும் காரணமாக அமைந்தது. தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் வழக்கமாக, கம்யூனிஸ்ட்டுக்கே வாக்களித்து வந்த நிலையில், இந்த வாக்குகளை இம்முறை பெற போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.. எப்படி பார்த்தாலும், இந்த தேர்தல் முடிவானது, நடக்க போகும் எம்பி தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்... என்ன நடக்க போகிறது? பார்ப்போம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications