"மீண்டும் முதல்வரான பிறகே அவைக்குள் கால் வைப்பேன்!" சபதம் போட்டு சொல்லியடித்த சந்திரபாபு நாயுடு
விசாகப்பட்டினம்: ஆந்திர சட்டசபைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு தான் எடுத்த சபதத்தை நிறைவேற்றி இருக்கிறார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்குச் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கும் நிலையில், ஆந்திர சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திர தேர்தல் முடிவுகள்: தொடக்கம் முதலே ஆந்திராவில் பல்வேறு தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலையில் இருந்த நிலையில், அங்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைத் தெலுங்கு தேசம் பதிவு செய்துள்ளது. ஆந்திராவில் மொத்தம் 175 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 132 தொகுதிகளில் தெலுங்கு தேசம் முன்னிலை பெற்றுள்ளது.
அவரது கூட்டணியில் இருந்த பவன் கல்யாண் கட்சி 21 தொகுதிகளைக் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக 8 சீட்களில் முன்னிலையில் இருக்கிறது.. ஆளும் கட்சியாக இருந்த ஒஎய்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 14 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.
சந்திரபாபு நாயுடு: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் முதல்வரான பிறகே ஆந்திர சட்டசபையில் நுழைவேன் என்று தான் எடுத்த சபதத்தை நிறைவு செய்து இருக்கிறார் சந்திரபாபு நாயுடு. அதென்ன சபதம்.. எதற்காக அவர் இப்படியொரு சபத்தை எடுத்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தச் சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. அப்போது ஆந்திர சட்டசபையில் இருந்து வெளியேறிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தன்னை பற்றி ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாகக் குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு கண்ணீர்விட்டு அழுதார்.
கண்ணீர்விட்ட சந்திரபாபு நாயுடு: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, "கடந்த இரண்டரை வருடங்களாகத் தொடர்ந்து என்னை அவமானப்படுத்தினார்கள்.. நான் அமைதியாக இருந்தேன். ஆனால், இன்று எனது மனைவி குறித்தும் அவதூறாகப் பேசுகிறார்கள்.. என் மனைவிக்கும் அரசியலுக்கும் தொடர்பே இல்லை.. நான் எப்போதும் மான மரியாதையுடன் வாழ்ந்து வந்துள்ளேன். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது" என்று கூறி கண்ணீர் விட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசினார்கள். அதற்கு நான் பதில் அளிக்க முற்பட்ட போது, அதற்குக் கூட அனுமதிக்காமல் மைக்கை ஆஃப் செய்துவிட்டனர். பதில் சொல்லக் கூட எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே நான் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தேன். ஆனால், இப்போது நான் சொல்கிறேன். மீண்டும் ஆட்சியைப் பிடித்த உடன் முதல்வர் பதவியை ஏற்ற பிறகே இந்த அவைக்குத் திரும்புவேன். அதுவரை ஆந்திர சட்டசபைக்குள் கால் வைக்க மாட்டேன்" என்று கூறியிருந்தார்.
சபதத்தை நிறைவேற்றினார்: அதன் பிறகு மூன்று ஆண்டுகள் சட்டசபை நடந்த போதிலும் அவர் ஆந்திர சட்டசபைக்குச் செல்லவே இல்லை. இதற்கிடையே இப்போது ஆந்திர தேர்தலில் அவரது கட்சி மிகப் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்பது உறுதியாகியுள்ளது. வரும் ஜூன் 9ஆம் தேதி அவர் முதல்வராகப் பதவியேற்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சந்திரபாபு நாயுடு தனது சபதத்தை நிறைவேற்றி உள்ளார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications