Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தானேவில் பெண் பஸ் கண்டக்டரின் ஆடையை கிழித்தெறிந்து தாக்கிய பயணி

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் பயணி ஒருவர் பெண் கண்டக்டரின் ஆடைகளை கிழித்தெறிந்து அவரை அடித்த சம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவ்லி பகுதியில் அபிஷேக் சிங்(30) என்பவர் மகாராஷ்டிரா அரசு போக்குவரத்து கழக பேருந்தில் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு ஏறியுள்ளார். அவர் பேருந்தின் முன்பக்கமாக ஏறியுள்ளார். இதற்கு டிரைவரோ ஏன் தவறான வழியில் ஏறுகிறீர்கள், பின் வழியாக ஏற வேண்டியது தானே என்று கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அபேஷேக் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த 34 வயது பெண் கண்டக்டர் அபிஷேக்கிடம் வயதானவருடன் ஏன் வாக்குவாதம் செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். உடனே அபிஷேக் கண்டக்டரை பேருந்தில் இருந்து வெளியே இழுத்து வந்தார்.

அபிஷேக் கண்டக்டரின் ஆடையை கிழித்தெறிந்து அவரை அடித்து நொறுக்கினார். பேருந்து நிறுத்தத்தில் நடந்த இந்த சம்பவத்தை பயணிகள் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். அதன் பிறகு சில மாணவர்கள் வந்து அபிஷேக்கை தடுத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அபிஷேக்கை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+