பிரமாண்டம்.. திறப்பு விழாவுக்கு தயாரான அயோத்தி ராமர் கோவில்! எப்படி இருக்கு பாருங்க! போட்டோக்கள்
அயோத்தி: அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவிலின் புதிய போட்டோக்களை ஸ்ரீராம ஜென்ம பூமியின் தீர்த்த சேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019 ம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதாவது அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து அயோத்தியில் 2.7 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளையை உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 2020 ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தற்போது ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோவில் பீடத்தின் மீது மூன்று அடுக்குகளாக ராமர் கோவில் அமைய உள்ளது. இந்த கோவில் 380 அடி நீளம், 250 அடி அகலம், 161 அடி உயரத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 3 கட்டங்களாக கட்டுமான பணிகள் நடக்க உள்ளது.

மிகவும் கலைநுட்பத்துடன் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள், கற்கள், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள் பயன்படுத்தி கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. 2024ம் ஆண்டுக்குள் இந்த பணிகளை முடித்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கோவிலின் முதற்கட்ட பணிகள் இந்த ஆண்டு டிசம்பம் மாதம் 30ம் தேதி முடிவடைய உள்ளது. முதற்கட்ட பணிகள் முடிவடைந்த பிறகு ஜனவரி மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
2024 ஜனவரி மாதம் 21 முதல் 24 ம் தேதிக்குள் பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவிலை திறந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 4 நாட்கள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் ஒன்றை பிரதமர் மோடி தேர்வு செய்து ராமர் கோவிலை திறந்து வைக்க உள்ளார். அதன்பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த கோவிலின் முழுமையாக கட்டுமான பணிகள் என்பது 2025ம் ஆண்டில் முடிவடைய உள்ளது.
கோவில் கட்டுமான பணிகளை பிரதமர் மோடியின் முதன்மை செயலாளரும், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளையின் கட்டுமான கமிட்டியின் தலைவருமான நிர்பேந்திர மிஸ்ரா மேற்பார்வை செய்து வருகிறார். முதற்கட்ட பணியில் தரைதளம் முழுமையாக முடிக்கப்பட உள்ளது. தரைதளம் மொத்தம் 5 மண்டபங்களை கொண்டிருக்கும். இந்த மண்டபங்கள் மொத்தம் 161 தூண்களுடன் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் அயோத்திர ராமர் கோவில் கட்டுமானத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா எனும் அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில் ராமர் கோவிலின் போட்டோக்களை பதிவிட்டுள்ளது.
மொத்தம் 4 போட்டோக்கள் அந்த பதிவில் வெளியாகி உள்ளது. கோவிலின் எழில்மிகு நுழைவு வாயில், கோவிலின் உள்புறம் உள்ள கலைநயமிக்க சுவர்கள் அனைவரையும் கவரும் வகையில் உள்ளன. மேலும் கட்டட கலை நிபுணர்கள் கலைநயமிக்க வேலைகளை செய்வது போன்ற போட்டோக்களும் அதில் அடங்கி உள்ளன.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications