யோகாவும், சூர்ய நமஸ்காரமும் இஸ்லாமுக்கு எதிரானது – போர்க்கொடி தூக்கும் முஸ்லிம் சட்ட வாரியம்
டெல்லி: இந்தியாவில் அனைத்துப் பள்ளிகளிலும் யோகா மற்றும் சூரிய வணக்கம் கட்டாயமாக்கப்படுவது இஸ்லாமுக்கு எதிரானது என்று முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவும் வாரியம் முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படவுள்ளதை பாஜக அரசு தனது வெற்றியாக கருதுகிறது.
இந்நிலையில், யோகாவுக்கு எதிராக களமிறங்க முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் மெளலானா காலித் ரஷீத் கூறுகையில், "யோகா விவகாரம் தொடர்பாக எங்களது வாரியத்தில் மெளலானா வாலி ரஹ்மானி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்கள் தங்களுக்கு உரிய அரசியல் உரிமைகளை அறிந்து கொள்ள வைப்பதற்கான வழிமுறைகளை அந்தக் குழு ஆராயும். பள்ளிகளில் கற்பிக்கப்படவுள்ள யோகா மற்றும் சூரிய வணக்கம் ஆகியவை முஸ்லிம் மத நம்பிக்கைகளுக்கு எதிரானவை என்பதை மக்களிடையே எடுத்துக் கூறுவோம்.
அண்மைக் காலமாக ஷரியா சட்டங்களுக்கு எதிரான முடிவுகளை சில நீதிமன்றங்கள் எடுத்துள்ளன. அதுபோன்ற தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்" என்று தெரிவித்துள்ளார் அவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications