காதலன் கட்டிய மஞ்சள் தாலியே போதும்.. இந்தாங்க உங்க தங்க செயின்.. கோர்ட் வாசலில் இளம்பெண் செய்த செயல்
காரைக்கால்: காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை மீட்டுத் தருமாறு பெற்றோர் தரப்பினர் கேட்ட நிலையில் அந்த பெண்ணோ தனக்கு காதலன் கொடுத்த மஞ்சள் தாலியே போதும் என கூறி தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கமல்ஹாசனின் மகள் தீபிகா (19). இவர் வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். புதுவை காரைக்காலை அடுத்த நிரவி பகுதியை சேர்ந்தவர் கவுதம்(22). இவர் டிப்ளமோ படித்துள்ளார்.

கவுதம், அம்பத்தூரில் தங்கி வேலை தேடி வந்தார். அப்போது அவருக்கு தீபிகாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் இருவரும் நட்பாக பழகி வந்தனர். இந்த நட்பு வழக்கம் போல் காதலாக மாறியது.
காதலித்த இவர்கள் சுதந்திர பறவைகளாக சுற்றி வந்தனர். இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற தீபிகா வீடு திரும்பாததால் கமல்ஹாசன் அதிர்ச்சி அடைந்தார். இதனிடையே தீபிகா காதலன் கவுதமுடன் காரைக்காலுக்கு வந்தார்.
இதையடுத்து இவர்கள் இருவரும் தமிழக எல்லையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவலை அறிந்த கமல்ஹாசன், கவுதம் தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாகவும் அவரை மீட்டு தர வேண்டும் என்றும் சென்னை அம்பத்தூர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து மாணவியின் செல்போனை வைத்து அவர் காரைக்காலை அடுத்த நிரவியில் உள்ளது சென்னை போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த மாணவியை தேடி நேற்று காரைக்கால் சென்றனர்.
இதை தெரிந்துக் கொண்ட புது திருமணம் செய்த காதல் ஜோடி, காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். அவர்களை துரத்தி பிடிக்க வந்த போலீஸாரை வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் தாங்கள் திருக்குவளையில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறி அதற்கான சான்றுகளை காதல் ஜோடி போலீஸாரிடம் காட்டினர்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் தங்களை மிரட்டுவதால் உரிய பாதுகாப்பு வேண்டும் என இருவரும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது தீபிகா, எனக்கு 19 வயதாகிவிட்டதால் சுயமாக முடிவு எடுக்கக் கூடிய அதிகாரத்தை சட்டம் எனக்கு கொடுத்திருக்கிறது. அதனால் நான் உங்களுடன் வரமாட்டேன் என கூறிவிட்டார். இதனால் அப்போது தங்களுடைய பொருட்களை பெற்றோர் தரப்பினர் திருப்பி கேட்டனர். இதையடுத்து தங்க தோடு, செயின், வளையல், வெள்ளி கொலுசு, செல்போன் உள்ளிட்டவற்றை கழற்றி கொடுத்துவிட்டு காதலனுடன் சென்று விட்டார். தீபிகாவுக்கும் கவுதமுக்கும் பேஸ்புக் மூலம் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications