Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கறிக்கடையில் திடீர்னு நுழைந்து.. பிரிட்ஜை திறந்த ஆபீசர்ஸ்.. ஐயோ 'பூனைக்கறி'.. அதுவும் எவ்ளோ தெரியுமா

மருத்துவர்கள் இக்கறியை உன்பது உடலுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

ஹனோய்: இறைச்சிக்காக கறிக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டாயிரம் பூனைகளின் உடல்களை வியட்நாம் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பூனைக்கறியை உலகம் முழுவதும் குறிப்பிட்ட சில மக்கள் உணவாக உட்கொள்கின்றனர். பாரம்பரிய மருத்துவத்தில் பூனைக்கறியில் ஆஸ்துமாவை குணப்படுத்தும் சக்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. சிலர் பூனையில் ரத்தத்தை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டாலே அனைத்து நோய்களும் குணமடைந்துவிடும் என்று நம்புகின்றனர். இந்தியாவின் சில பழங்குடியின மக்களிடையே பூனை இறைச்சி உண்பது சாதாரண ஒன்றாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் பூனை இறைச்சியை உண்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் வியட்நாம் நாட்டுடன் ஒப்பிடும் போது இதெல்லாம் ஜுஜூபி என்று சொல்லாம். ஏனெனில் அந்நாட்டில் பூனை இறைச்சி சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனை வெளிப்படையாக கடைகளில் விற்கலாம். இதனால் அந்நாட்டில் பூனைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்னர் பூனை கறியை தடை செய்ய அரசு பரிசீலித்து வருகிறது.

பூனைக்கறி

பூனைக்கறி

இருப்பினும் பூனையின் உடற்பாகங்கள் சில பாரம்பரிய மருந்து தயாரிக்க பயன்படுவதால் இந்த தடை குறித்து நீண்ட ஆலோசனை நடபெற்று வருகிறது. ஒருவேளை தடை விதிக்கப்பட்டாலும் கூட மக்கள் இந்த இறைச்சி உண்பதை கைவிட தயாராக இல்லை. இந்நிலையில் டோங் தாப் மாகாணத்தில் சுமார் 2000 இறந்த பூனைகளின் உடல்களை வியட்நாம் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பூனையின் உடல்கள் அனைத்தும் ஒரு பெரிய பிரிட்ஜில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்த அவர்கள் கூறியதாவது, "எங்களுக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.

 2000 பூனையின் உடல்கள்

2000 பூனையின் உடல்கள்

மறுமுனையில் பேசிய நபர், மீகாங் டெல்டாவில் உள்ள டோங் தாப் மாகாணத்தில் இயங்கி வரும் இறைச்சி கூடத்தில் சட்டவிரோதமாக பூனைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து கறிகடை மார்க்கெட்டில் சோதனை நடத்தினோம். அதில் சுமார் 480 பூனைகள் சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பூனைக்கறிக்கு இங்கு தடை இல்லையென்றாலும் கூட, விற்பனைக்கான பூனைகள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது குறித்து உரிய ரசீது வைத்திருக்க வேண்டும். இந்த கடை உரிமையாளரிடம் எவ்வித ரசீதும் இல்லை. எனவே நாங்கள் கடையை மேலும் சோதனை நடத்தினோம்.

 பாரம்பரிய மருந்து

பாரம்பரிய மருந்து

சோதனையில் சுமார் 2000 பூனை உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து கேள்வியெழுப்பியபோது, பாரம்பரிய மருந்துகளை தயாரிக்க இந்த பூனைகளை சேமித்து வைத்திருப்பதாக கறி கடை உரிமையாளர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்குறிய தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்" என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பூனை எலும்புகளிலிருந்து எடுக்கப்படும் சாறு ஆஸ்துமா மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புகளை குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

 மருத்துவர்கள் சொல்வதென்ன?

மருத்துவர்கள் சொல்வதென்ன?

ஆனால் மருத்துவர்கள் இக்கறியை உன்பது உடலுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர். பூனைகளின் ரத்தத்தில் இருக்கும் ஒரு வகை வைரஸ்கள் இந்த இறைச்சியை உண்பதன் மூலம் மனிதனுக்கும் கடத்தப்படுகிறது. எனவே டோக்ஸோபிளாஸ்மாசிஸ் எனும் பாதிப்பு ஏற்படுகிறது. இது நுரையீரலையும், மூளையையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+