முதலிரவில் நகைகளுடன் இளம்பெண் தப்பியோட்டம்... 70 வயது முதியவர் ஏமாற்றம்
Recommended Video

இஸ்லாமாபாத்: 70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண், முதலிரவின் போது அவருக்கு பாலில் மயக்க மருத்து கொடுத்துவிட்டு, வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு தப்பியோடி உள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா மாவட்டத்தில் வசிப்பவர் முகமது முஸ்தபா. இவருக்கு 70 வயது ஆகிறது. ஏற்கனவே திருமணமான முதியவருக்கு, நஜ்மா பிபி என்ற 28 வயது இளம் பெண்ணை இரண்டவதாக திருமணம் செய்தார். தனது இரண்டாவது மனைவி நஜ்மா பிபிக்கு ரூ.70,000 பணம் கொடுத்ததுடன், முதல் மனைவியின் நகைகளை போட்டு அழகு பார்த்துள்ளார்.

இந்நிலையில் முஸ்தபாவுக்கும், நஜ்மா பிபிக்கும் முதலிரவுக்கு ஏற்பாடு நடந்துள்ளது. முதலிரவின் போது, நஜ்மா பிபி தனது கணவர் முஸ்தபாவுக்கு பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்த முஸ்தபா மயங்கிவிட்டார். பின்னர் காலையில் முஸ்தபா எழுந்து பார்த்த போது மனைவியை காணாமல் பெரும் அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை திருடி கொண்டு நஜ்மா பிபி ஓடிவிட்டதை முஸ்தபா பின்னர் அறிந்து கொண்டார்.
இதையடுத்து முதியவர் முஸ்தபா, போலீசில் தனக்கு ஏற்பட்ட நிலையை புகாராக அளித்தார். அந்த புகாரில் தன்னை நஜ்மா பிபி, ஒரு கும்பலுடன் சேர்ந்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும், அவர்களை விசாரித்து கைது செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த திருமண மோசடி கும்பலிடம் 24,4000 ரூபாய் முஸ்தபா கொடுத்து ஏமாந்து இருப்பதாக கூறிய போலீசார், தொடர்ச்சியாக அந்த பெண் வயதான முதியவர்களை குறிவைத்து திருமணம் செய்து பணம் பறிப்பதாக கூறினார்.
-
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications