3000 தமிழர்கள் புடை சூழ... தித்திக்கும் பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்த சிங்கப்பூர் பிரதமர் லீ

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பொங்கல் பண்டிகை நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் லீ ஹிசீன் லூங் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நம் நாட்டைப் போல இல்லை சிங்கப்பூர். அங்கு பொங்கல் பண்டிகை தேசிய பண்டிகையாகும். தேசிய விடுமுறை விடப்படுகிறது. நாட்டின் பிரதமரே பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்.

கிழக்கு சிங்கப்பூரில் உள்ள அங்மோகியோ நகரில் தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் பண்டிகை நிகழ்ச்சியில் அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்நாட்டுப் பிரதமருமான லீ ஹிசீன் லூங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

3000 தமிழர்கள் புடை சூழ:

3000 தமிழர்கள் புடை சூழ:

நிகழ்ச்சியில் பேசிய சிங்கப்பூர் பிரதமர் பொங்கல் பண்டிகையின் மூலம் சமுதாயத்தில் ஒற்றுமையும், இனப்பாகுபாடு இல்லாத நல்லிணக்கமும் பெருக வேண்டும் என குறிப்பிட்டார். சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 3,000 தமிழர்கள் கலந்துகொண்டனர்.

விமரிசையான பொங்கல்:

விமரிசையான பொங்கல்:

சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் கொண்டாடிய பாரம்பரிய பொங்கல் பண்டிகை நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமரான லீ ஹிசீன் லூங் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

4 நாள் கொண்டாட்டம்:

4 நாள் கொண்டாட்டம்:

தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை தொடர்ந்து 4 நாட்கள் வெகு விமரிசையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொது விழா கொண்டாட்டம்:

பொது விழா கொண்டாட்டம்:

இந்நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக தொடங்கியுள்ளனர். சிங்கப்பூரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Ang Mo Kio என்ற நகரில் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை ஒரு பெரும் பொது விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

மாலை அணிவித்து வரவேற்பு:

மாலை அணிவித்து வரவேற்பு:

இதில்தான் லீ ஹிசீன் லூங் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். நிகழ்ச்சிக்கு வந்த பிரதமருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மாலை அணிவித்து அன்புடன் வரவேற்றனர்.

தித்திக்கும் சர்க்கரைப் பொங்கல்:

தித்திக்கும் சர்க்கரைப் பொங்கல்:

கிட்டதட்ட 3,000 தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், பெண்கள் சமைத்திருந்த சர்க்கரை பொங்கலை பிரதமர் ஆர்வமுடன் ருசித்து அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டார். இதில் சீன நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+