சீனாவில் கடும் நிலநடுக்கம்: 3 பேர் பலி, 20 பேர் படுகாயம்
பெய்ஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 3 பேர் பலியாகியுள்ளனர் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டெர் அளவில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜின்ஷியாங் மாகாணத்தில் இருந்து சுமார் 160 கி.மீ. தொலைவில் குமா கவுன்ட்டி அருகில் உள்ள ஹோடன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார். இந்த நிலநடுக்கம் சுமார் 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். நிலநடுக்கத்திற்கு இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 20பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குமா கவுன்ட்டி பகுதியில் அதிக அளவு விவசாயம் நடைபெற்று வருகிறது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக விளங்கும் இந்தப்பகுதியில் இந்த வாரத்தில் ஏற்பட்ட 2வது நிலநடுக்கம் இதுவாகும். கடந்த வாரம் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்தன. சீனாவில் இந்த வருடத்தில் மட்டும் 8 முறை பூகம்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications