ஊரே அழிந்த பின்பும் தனியாக வாழும் 90 வயது தாத்தா.. புயலுக்கு மத்தியில் தில்லாக வாழ்கிறார்
பியூர்டாரிகோ என்ற தீவு புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் கூட அங்கு ஒரு முதியவர் தனியாக வசித்து வருகிறார்.
Recommended Video

பியூர்டாரிகோ: அமெரிக்கவிற்கு பக்கத்தில் இருக்கும் மிகச்சிறிய தீவுதான் பியூர்டாரிகோ. இங்கு கடந்த சில மாதங்களாக மாறி மாறி புயல் வீசி வருகிறது. இதனால் தற்போது அந்த தீவின் முக்கால்வாசி பகுதி அழிந்து போய் இருக்கிறது.
அந்த சிறிய தீவை விட்டு எல்லா மக்களும் வெளியேறிவிட்டார்கள். இந்த நிலையில் அந்த தீவை விட்டு வெளியே வரமாட்டேன் என்று 90 வயது நிரம்பிய 'அலிஜான்ரோ லா லுஸ் ரிவரா' என்ற நபர் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் புயலுக்கும் கொடூரமான இடிபாடுகளுக்கும் இடையிலும் அவர் தில்லாக வசித்து வருகிறார். தற்போது அமெரிக்கா முழுக்க அவரது ஊர் பாசம் வைரல் ஆகியுள்ளது.

பியூர்டாரிகோவில் மோசமான புயல்
பியூர்டாரிகோவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'இர்மா' என்ற புயல் வந்தது. இந்த புயல் காரணமாக பியூர்டாரிகோ பகுதியில் அமெரிக்க அரசாங்கம் அவசரநிலையை பிரகடனப்படுத்தியது. அதன்பின் தற்போது மீண்டும் அங்கு 'மரியா' என்ற புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக அங்கு இருந்த மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் அந்த தீவைவிட்டு நிறைய மக்கள் வெளியேறி வருகிறார்கள்.

பாதிப்பு அதிகம்
இந்த மரியா புயல் காரணமாக அங்கு நிறைய சேதங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஒரே வாரத்தில் 1,500க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீவில் இருக்கும் 90 சதவிகிதமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. லட்சக்கணக்கில் மக்கள் ஊரைவிட்டு வெளியேறிவிட்டார்கள். அங்கு இருந்த மக்கள் அனைவரும் நியூயார்க், கலிபோர்னியா, பென்சில்வேனியா என அமெரிக்காவின் மாகாணங்களில் குடியேறி வருகிறார்கள்.

அதே ஊர்
இந்த நிலையில் பியூர்டாரிகோவில் வசித்து வந்த அலிஜான்ரோ என்ற 90 வயது முதியவர் அந்த தீவை விட்டு செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார். முதல் இரண்டு நாட்கள் அங்கு இருந்து பென்சில்வேனியா சென்று இருக்கிறார். ஆனால் அங்கு இருக்க பிடிக்காமல் மீண்டும் பியூர்டாரிகோ பகுதிக்கே திரும்பி வந்து இருக்கிறார். இப்போது அவர் நகரத்தில் அவர் மட்டும் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் பியூர்டாரிகோவில் சில அரசு அதிகாரிகளும் வாழ்ந்து வருகின்றனர்.

வாழ்க்கை எப்படி
இந்த புயல் காரணமாக முக்கால்வாசி நகரம் அழிந்து போய்விட்டது. கடந்த 8 நாட்களாக அங்கு எங்குமே மின்சாரமும், தண்ணீரும் இல்லை. ஆனாலும் அந்த தாத்தா தனியாக அங்கு எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கிறார். மேலும் அதுதான் தான் பிறந்து ஊர் எப்போது அதைவிட்டு வரமாட்டேன் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் செயல் பியூர்டாரிகோ மக்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications