ஆப்கன் புதிய அமைச்சரவையில் சர்வதேச பயங்கரவாதிக்கு உள்துறை அமைச்சர் பதவி.. ஷாக் கொடுத்த தாலிபான்கள்
காபூல்: சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், ஆப்கனில் தாலிபான்கள் புதிய அரசை அமைத்துள்ளது. தாலிபான்கள் அமைச்சரவை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் அமெரிக்க அரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள தாலிபான் தலைவரும் இடம் பெற்றுள்ளார்.
இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கனிலுள்ள பயங்கரவாதிகள் மீது அமெரிக்கப் படை எடுத்தது. அப்போது அங்கு ஆட்சியிலிருந்து தாலிபான்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
சுமார் 20 ஆண்டுகளாக ஆப்கனில் அமெரிக்கப் படைகள் இருந்த நிலையில், அங்கிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதாக அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்தனர். அதன்படி கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் கடைசி அமெரிக்கப் படை வீரரும் ஆப்கனில் இருந்து வெளியேறினார்.

தாலிபான்கள்
மறுபுறம் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே, ஆப்கன் ராணுவம் மீது தாலிபான்கள் தங்கள் தாக்குதலைத் தொடங்கினர். தாலிபான்கள் இந்தளவு வலிமையாக இருப்பார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் தான் வெறும் சில வாரங்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கனை தாலிபான்களால் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிந்தது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

புதிய அரசு
அதன் பிறகு புதிய அரசை அமைப்பதில் சற்று கால தாமதம் ஏற்பட்டது. யார் பிரதமராக வேண்டும் என்பதில் முழு உடன்பாடு ஏற்படாததால் காலதாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தாலிபான் புதிய அரசு குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி யாரும் எதிர்பாராத வகையில், பெரியளவில் பரிட்சியம் இல்லாத முல்லா அப்துல்லா முகமது ஹசன் அகுந்த் இடைக்கால பிரதமராகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேற ஒரே வாரத்தில் தாலிபான்கள் புதிய அரசை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திடீர் மாற்றம்
இந்நிலையில், தாலிபான்களின் அமைச்சரவை குறித்து முழு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஆப்கன் பிரதமராக ஆவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முல்லா அப்துல் கனி பரதர் அந்நாட்டின் முதலாவது துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். தாலிபான்களை நிறுவிய முக்கிய தலைவர்களில் ஒருவர் தான் இந்த முல்லா அப்துல் கனி பரதர். கடந்த ஆண்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அமெரிக்கப் படைகள் ஆப்கானைவிட்டு வெளியேறு காரணமாக இருந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவரும் இந்த முல்லா அப்துல் கனி பரதர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இரண்டாவது துணைப் பிரதமராக இரண்டாவது, துணைப் பிரதமராக முல்லா அப்துல் சலாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள் துறை அமைச்சராகச் சர்வதேச பயங்கரவாதி
இதில் குறிப்பாக உள் துறை அமைச்சர் குறித்த அறிவிப்பு தான் உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. சர்வதேச அளவில் முக்கிய பயங்கரவாத இயங்களில் ஒன்று ஹக்கானி நெட்வொர்க், இதன் தலைவராக உள்ளவர் சிராஜுதீன் ஹக்கானி. அமெரிக்காவின் FBI அமைப்பால் சர்வதேச பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டு 5 மில்லியன் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டவர் தான் இந்த சிராஜுதீன் ஹக்கானி. அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததா கூறப்படும், இவர் புதிய உள்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் இவருக்கு நேரடியாக தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

தாலிபான்களை நம்பலாமா
ஒருபுறம் கடந்த 1996 - 2001 வரையிலான ஆட்சியைப் போல இந்த முறை இருக்காது எனத் தாலிபான்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், மறுபுறம் அமெரிக்காவில் தேடப்பட்டு வரும் குற்றவாளி ஒருவரையே உள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது தாலிபான்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகின்றனர். இதேபோல பெண்கள் உரிமை பாதுகாக்கப்படும் என அவர்கள் கூறும் நிலையில், இதுவும் எந்தளவு நடைமுறையில் இருக்கும் என்பது வரும் காலங்களில் தான் தெரிய வரும்.

அத்தனை பேரும் தாலிபான்கள் தான்
தாலிபான்களின் அமைச்சரவையில் மொத்தம் 19 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருமே தாலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகும். தாலிபான் அமைப்பைச் சேராத யாருக்கும் புதிய அரசில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல எதிர்பார்த்தபடியே பெண்கள் யாருக்கும் இந்த புதிய தாலிபான் அரசில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதர முக்கிய அமைச்சர்கள்
அமீர்கான் முத்தாகி - வெளியுறவு துறைர அமைச்சர்
ஹெடையத்துல்லா பத்ரி - நிதியமைச்சர்
டின் முகமது - பொருளாதார துறை அமைச்சர் அமைச்சர்
அதேபோல ஆப்கன் ரிசர்வ் வங்கி கவர்னராக முகமது எட்ரிஸ் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications