Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவமானப்படுவீர்கள்.. பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஆப்கான். கேர் டேக்கர் சாலே.. மோதல்!

Subscribe to Oneindia Tamil

காபூல்: பாகிஸ்தானின் பரம வைரி.. தாலிபான்களின் சிம்ம சொப்பனம் என்று வர்ணிக்கப்படும், சிஐஏ மூலம் நேரடியாக பயிற்சி கொடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் துணை அதிபர் அம்ருதா சாலே தற்போது பாகிஸ்தானுக்கு கடுமையான வார்னிங் கொடுத்துள்ளார்.

Recommended Video

    Afghanistan-ல் தீவிரவாத ஆட்சி..கொண்டாடும் Pakistan | Oneindia Tamil

    ஆப்கானிஸ்தான் நாட்டில் 20 வருடமாக நடந்து வந்த போரின் முடிவில் தாலிபான்கள் வெற்றிபெற்றது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில் மொத்தமாக ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளது. ஆப்கான் அதிபராக இருந்த அஷ்ரப் கானி ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் மொத்தமாக தாலிபான் படைகளின் கட்டுப்பாட்டில் நாடு உள்ளது.

    இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் ஆப்கானிஸ்தான் ஆக்டிங் அதிபர் நான்தான், துணை அதிபரான எனக்கே நாட்டை ஆளும் தகுதி இருக்கிறது என்று அந்நாட்டு துணை அதிபர் சாலே குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது பஞ்ச்சீர் மலை பகுதியில் தலைமறைவாக நார்தன் அலியன்ஸ் கொரில்லா போராளி குழுக்களோடு தங்கி இருக்கும் சாலே தாலிபான் படைகளுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வருகிறார்.

    கடுமையான குரல்

    கடுமையான குரல்

    ஆப்கான் நாட்டு சட்ட விதிகளின்படி நம் நாட்டின் அதிபர் இறந்துவிட்டாலோ, தலைமறை ஆனாலோ, பதவி விலகினாலோ, வெளிநாடு தப்பி ஓடினாலோ துணை அதிபராக இருப்பவர்தான் காபந்து அதிபராக தேர்வு செய்யப்படுவார். அதனால்தான் நாட்டின் அதிபர். எனக்கே நாட்டின் ஆளும் உரிமைகள் இருக்கிறது. தாலிபான்களிடம் இருந்து காபூலை மீட்பதே எங்களின் நோக்கம் என்று சாலே குறிப்பிட்டுள்ளார்.பாகிஸ்தானுக்கு எதிராக தொடக்கத்தில் இருந்தே குரல் கொடுத்து வந்தவர் இவர். அமெரிக்காவின் சிஐஏ மூலம் பயிற்சி பெற்றவர் சாலே.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்தான் தாலிபான்கள் எழுச்சிக்கு காரணம் என்று தொடக்கத்தில் இருந்தே குறிப்பிட்டு வந்தார். பாகிஸ்தான்தான் தாலிபான்களுக்கு பயிற்சி கொடுத்தது. தீவிரவாதிகளின் இருப்பிடமாக பாகிஸ்தான் உள்ளது. அங்குதான் ஒசாமா பின்லேடன் இருந்தார் என்றும் சாலே தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். பாகிஸ்தானும் சாலேவை இந்தியாவின் கைக்கூலி, அவர் இந்திய உளவுத்துறையின் அடியாள் என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. இப்போது கானி பதவி விலகி உள்ள நிலையில் தாலிபான்களுக்கு எதிராக ஒரே எதிரியாக, பிரச்சனையாக சாலே உருவெடுத்துள்ளார். இவரின் அடுத்த மூவ் என்ன, அமெரிக்காவால் பயிற்சி அளிக்கப்பட்ட இவர் அடுத்து என்ன செய்வார், ஏன் இவர் இன்னும் ஆப்கானிஸ்தானில் தங்கி இருக்கிறார் என்று கேள்விகள் எழுந்து வருகின்றன.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இந்த நிலையில்தான் தற்போது தாலிபான்களுக்கும், பாகிஸ்தானுக்கும் எதிராக கடுமையான விமர்சனங்களை சாலே வைத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ஆப்கானிஸ்தானில் எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டும். சட்டத்தைதான் மதிக்க வேண்டும். ஆயுதங்களுக்கு, வன்முறைகளுக்கும் ஆப்கானிஸ்தானில் இடம் கொடுக்க கூடாது. ஆப்கானிஸ்தான் பெரிய பாரம்பரியம் கொண்ட நாடு. ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய நாடு.

    ஆப்கானிஸ்தான்

    ஆப்கானிஸ்தான்

    இப்படி பரந்து விரிந்து இருக்கும் ஒரு நாட்டை பாகிஸ்தான் அவ்வளவு எளிதாக விழுங்கிவிட முடியாது. பாகிஸ்தானால் எங்கள் நாட்டில் ஆதிக்கம் செலுத்த முடியாது. பாகிஸ்தானால் எங்களை ஆள முடியாது. அவர்களிடம் அதற்கான சக்தி கிடையாது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடிபணிந்து இருக்கிறார்கள். தீவிரவாதிகளுக்கு அடிபணிந்த நாடு, அவமானத்தை சந்தித்த நாடு என்ற அவலத்தை பாகிஸ்தான் தனது வரலாற்றில் பெற்று விடும், வரலாற்றில் பாகிஸ்தான் அவமானப்படும். உலக நாடுகள் தாலிபான்களை அங்கீகரிக்க கூடாது.

    தாலிபான்கள் உலக நாடுகள்

    தாலிபான்கள் உலக நாடுகள்

    தாலிபான்களுக்கு உலக நாடுகள் அடிபணிய கூடாது. உலக நாடுகளை தாலிபான்களின் செயலும், அவர்கள் நாட்டை கைப்பற்றிய விதமும் திக்குமுக்காட செய்துள்ளது. அவர்கள் ஆயுதங்களை பயன்படுத்தி நாட்டை பிடித்துள்ளனர். இது தவறானது. நான் என் மண்ணில்தான் இருப்பேன். எங்கும் செல்ல மாட்டேன். என் மக்களுடன் நான் உடன் இருப்பேன். பாகிஸ்தானின் ஆதரவுடன் நடக்கும் இந்த ஆக்கிரமிப்பை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன், இதை தொடர்ந்து எதிர்ப்பேன் என்று சாலே வெளிப்படையாக சவால்விட்டு இருக்கிறார்.

    சாலே

    சாலே

    சாலே என்னதான் வெளிப்படையாக தாலிபான்களை எதிர்த்து வந்தாலும் அவருக்கு உலக நாடுகள் பெரிதாக இதுவரை ஆதரவு அளிக்கவில்லை. இவரை வளர்த்த, இவருக்கு பயிற்சி கொடுத்த அமெரிக்காவே இப்போது இவருக்கு ஆதரவாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் தாலிபான்களுக்கு ஆதரவாக ரஷ்யா, பாகிஸ்தான், சீனா என்று பல உலக நாடுகள் இருக்கின்றன. தற்போது நார்தன் அலியன்ஸ் என்ற போராளி குழுக்களோடு இவர் தங்கி இருக்கிறார். இவர்கள் தாலிபான்கள் படைகளை எதிர்க்கும் போராளி குழுக்கள் ஆகும். 1996ல் முஜாகிதீன் அமைப்பில் இருந்து பிரிந்து உருவான குழு ஆகும் இது. இந்த குழுவில் தொடக்க காலத்தில் இருந்தவர்தான் சாலே.

    மீண்டும்

    மீண்டும்

    இங்கிருந்து படிப்படியாக வளர்ந்தவர் சாலே. பின் அமெரிக்காவுடன் இருந்த நெருக்கம் காரணமாக துணை அதிபர் பதவி வரை உயர்ந்தார். தற்போது நாடு தாலிபான்கள் கைக்கு சென்றுள்ளது. இதனால் மீண்டும் தனது தாய் குழுவிற்கு சென்று இருக்கிறார். மீண்டும் தாலிபான்களை தொடக்கத்தில் இருந்து எதிர்க்கும் நிலைக்கு சென்றுள்ளார். பல முறை சாலேவை இதனால்தான் தாலிபான்கள் கொலை செய்ய கூட முயன்றது. இவரை தாலிபான்கள் வைரியாக பார்க்கும் நிலையில் விரைவில் இவர் இருக்கும் பகுதிகளும் தாலிபான்கள் மூலம் கைப்பற்றப்படலாம். விரைவில் இவரும் தாலிபான்கள் மூலம் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+