Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடம்பில் இறுக்கமான டிரஸ் கூடாது.. கால் தெரியும்படி செருப்பு போடக்கூடாது.. சிக்கலில் ஆப்கன் பெண்கள்

தாலிபன் தீவிரவாதிகளின் அட்டாகசம் பெருகி கொண்டே இருக்கிறது

Subscribe to Oneindia Tamil

காபூல்: தாலிபான்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.. இவர்கள் நடத்தும் தாக்குதலில் பாகிஸ்தான் படைகள் மட்டுமல்லாமல் பல அப்பாவிகளும் பலியாகிறார்கள்.. பெண்கள், குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது... இதுபோக, பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் அதிகரித்து விட்டது..!

ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணங்களில் பெரும்பகுதியை தாலிபான்கள் தற்போது ஆக்கிரமித்துள்ளன.... ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாகவே அந்நாட்டு அரசு படைகளுடன் கடும் போரில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இந்த வன்முறை போராட்டத்தை போராட்டத்தை உலகமே அதிர்ந்து போயுள்ளது.. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா போன்ற உலக நாடுகள் முயற்சிகளில் இறங்கி உள்ளன.

 வாபஸ்

வாபஸ்

வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது.. இதற்காகத்தான் தாலிபான்களும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவை அச்சுறுத்தவே தாலிபான்கள் தொடர்ந்து அக்கிரமத்தில் ஈடுபட்டுள்ளனர்..

 கொலை

கொலை

அதில் பத்திரிகையாளர்களும் விதிவிலக்கல்ல. ரேடியோ, டிவி, நாளிதழ் என மீடியாவில் வேலை பார்த்து வருபவர்களை பிளான் செய்து தாக்கிவருகிறது. ஒரு பத்திரிகையாளரை கடத்தி கொன்றே விட்டார்கள்.. இத்தனைக்கும் அவர் அரசியல் சம்பந்தப்பட்டவரே கிடையாது.. கடந்த வாரம் ஆப்கனின் பிரபல காமெடி நடிகர் நசார் முகமத் கொல்லப்பட்டார்... இதற்கு பிறகு, இளம்பெண் ஒருவரை மனசாட்சியே இல்லாமல் கொன்றார்கள்..

 அப்பாவி மக்கள்

அப்பாவி மக்கள்

அமெரிக்க படைகள் வெளியேற்றத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து உள்ளது.. இந்த ஒரு மாசத்தில் மட்டும் சுமார் 1000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா கூறுகிறது.. தலிபான்களை சமாளிக்க முடியாமல் அரசு படைகளும் திணறி வருகின்றன... தலிபான்களோ முக்கிய நகரங்களை கைப்பற்றி முன்னேறி வருகின்றனர்.

 பாதிப்பு

பாதிப்பு

இதனால் பெண்களுக்கு நிறைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. ஆபத்தும் நேர்ந்து கொண்டிருக்கிறது.. ஆப்கனில் ஹேராத் என்ற நகரம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் ஜாஹிரா. இவருக்கு தாலிபான்கள் பற்றி எதுவுமே தெரியாது.. அதனால் நன்றாக படித்துள்ளார்.. சுதந்திரமாக இருந்துள்ளார்.. இப்போது உள்ளூர் என்ஜிஓ ஒன்றில் இணைந்து பாலின சமத்துவத்திற்காக வேலை பார்த்தும் வருகிறார்.

 கேள்வி?

கேள்வி?

இப்படிப்பட்ட சூழலில் ஜாஹிரா வசித்துவரும் பகுதியை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.. அத்துடன் அந்த பகுதியில் தங்களுடைய கொடியையும் நட்டு வைத்து ஏற்றியுள்ளனர்... இதையடுத்து ஜாஹிரா உட்பட அந்த பகுதியில் உள்ள மொத்த பெண்களும் வீடுகளுக்குள் முடங்கும் சூழல் ஏற்பட்டு விட்டது.. இத்தனை வருஷமா கடிஷ்டப்பட்டு படிச்சு முன்னுக்கு வந்திருக்கேன், ஆனால், இப்படி எப்படி வீட்டுக்குள் முடங்க முடியும்? எப்படி மறைந்து வாழ முடியும் என்று அதிர்ச்சி கேள்வி எழுப்புகிறார் ஜாஹிரா.

உளவுத்துறை

உளவுத்துறை

ஆனால், ஜாஹிராவின் கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.. தாலிபான்களோ தொடர்ந்து முன்னேறி கொண்டுள்ளனர்.. இப்பவே ஆப்கானிஸ்தானின் 12 மாகாணங்கள் தாலிபன்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கிறது.. இன்னும் ஒரே மாசத்திற்குள் காபூலை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விடுவார்கள் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

குழந்தைகள்

குழந்தைகள்

விளைவு, ஒவ்வொருத்தராக அந்த நாட்டை விட்டுவெளியேறி கொண்டிருக்கிறார்கள்.. இதுவரை 25,000 பேருக்கு மேல் அந்நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.. இதில் பெரும்பாலானோர் பெண்களும், பெண் குழந்தைகளும்தான்.. இந்நிலையில், பெண்கள், பத்திரிக்கையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருவதாக ஐநா பொதுச் செயலாளர் குட்டரெஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.. அதிலும் பெண்களின் உரிமைகள் என்பது சுத்தமாக காணப்படவில்லை என்றும் அவர் பகிரங்கமாகவே கூறியுள்ளார்...

 கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

2001ம் வருடம்வரை தலிபான்களின் பிடியில் 5 வருஷம் ஆப்கானிஸ்தான் இருந்தது... அப்போது ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டன.. வேலைக்கு போக கூடாது, படிக்க கூடாது, ஆண் துணை இல்லாமல் எங்குமே வெளியே போக கூடாது என என்று கண்டிஷன்கள் போடப்பட்டன.. இப்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி, கால் தெரியும்படி பெண்கள் செருப்பு போடக்கூடாதாம்.. கடந்த வாரம் கால் தெரியும்படி சில பெண்கள் செருப்பு அணிந்துள்ளனர்.. ஆனால், அவர்களை தலிபான்கள் கண்டித்துள்ளனராம்..

அட்டகாசம்

அட்டகாசம்

ஒரு பெண் டிரஸ்ஸை இறுக்கமாக போட்டுள்ளார்.. அதுக்கே கொன்றுவிட்டார்கள்.. இன்னொரு பெண் ஆண் துணை இல்லாமல் வெளியே வந்தாராம், அவரையும் கொன்றுவிட்டார்கள்.. இப்படி தாலிபன்களின் அட்டகாசம் பெருகி கொண்டே போகிறது..அதுமட்டுமல்ல, கல்யாணம் ஆகாத பெண்களை திருமணம் செய்து வைக்க கோரி அந்த பகுதி மக்களை மிரட்டி கொண்டிருக்கிறார்கள்... இது பாலியல் வன்முறையின் ஒரு வடிவம் என்கிறார்கள் மனித உரிமை குழுக்கள்.

வன்முறை

வன்முறை

எல்லாவற்றையும் பேசி தீர்த்து கொள்ளலாம் என்று அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆப்கானிய அழைப்பு விடுத்தாலும், தாலிபான்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை.. ஏற்றக் கொள்ளவுமில்லை.. தொடர்ந்து வன்முறையைதான் அதிகப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.. ஏற்கனவே தாலிபான்கள் சிறைபிடிக்கப்பட்ட இளம் சிறுமிகள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருவதாக ஐநா நடத்தி ஆய்வில் தகவலை வெளியிட்டது..

 பெண் சமூகம்

பெண் சமூகம்

இத்தனை காலம் சுரண்டலின் கொடுமையை அனுபவித்து வந்த அந்த மக்கள், இப்போது, மத அடிப்படைவாத கும்பலின் அடக்குமுறையில் சிக்கி கொள்ளும் அபாயத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆப்கான் பெண்கள் இப்போதுதான், படிக்க தொடங்கி உள்ளனர்.. சமூகத்திற்குள் தங்களுக்கென சுயமாக நிற்க கற்று வருகின்றனர்.. சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்துள்ளனர்.. மெல்ல மெல்ல பெண் சமூகம் முன்னேறி வரும் நிலையில், மறுபடியும் அவர்களை அடக்கி அராஜகத்தை கட்டவிழ்த்து, மீண்டும் பழைய வரலாறுகளுக்கே அவரை இட்டுச் செல்லும் அபாய முயற்சியில்தான் தாலிபன்கள் இறங்கி உள்ளனர்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+