முதலில் சர்வதேச பிரபலங்கள்...இப்போது நடிகை சூசன்...விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு
மும்பை : விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டு பிரபலங்களைத் தொடர்ந்து மும்பையை சேர்ந்த பழம்பெரும் நடிகையான சூசன் சரன்டோன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 75 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் ஜனவரி 26 ம் தேதி நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் கலவரம் வெடித்த சம்பவத்திற்கு பிறகு, விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

சர்ச்சையான பிரபலங்கள் கருத்து :
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பிரபல பாப் பாடகி ரிஹானா ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இந்திய பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சுவீடன் நாட்டு இயற்கை ஆர்வலரான கிரெட்டா தும்பெர்க்கும் ஆதரவு கருத்தைப் பதிவிட்டார்.

பூதாகரமாகும் டூல்கேட் :
அத்துடன் அவர் பகிர்ந்து, பின் தானே நீக்கிய டூல்கிட் பெரும் சர்ச்சையாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க டெல்லி போலீசார், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஹாலிவுட் நடிகை ஆதரவு :
இதற்கிடையில், மும்பையை சேர்ந்த நடிகையும், Thelma & Louise என்ற படத்தில் நடித்ததன் மூலம் சமீபத்தில் சர்வதேச அளவில் பேசப்பட்ட ஹாலிவுட் நடிகையுமான சூசன் சரன்டோனும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
74 வயதாகும் சூசன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு நாம் தோள்கொடுத்து நிற்க வேண்டும். அவர்கள் யார், எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்பதை கீழே உள்ளதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டு, கட்டுரை ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

ஆதரவு தந்த சர்வதேச பிரபலங்கள் :
விவசாயிகள் போராட்டத்திற்கு, கிரெட்டா தும்பெர்க், அமெரிக்க வழக்கறிஞர் மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் உறவினருமான மீனா ஹாரிஸ், நடிகர் அமண்டா செர்னி, பாடகர்கள் ஜோ சீன், முன்னாள் நடிகை மியா கலிபா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் ஏற்கனவே தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications