ஊருக்கு சென்றுவிட்டு சிங்கப்பூருக்கு ஏர் ஏசியாவில் கிளம்பிய இளம் ஆசிரியை
சிங்கப்பூர்: மாயமான ஏர் ஏசியா விமானத்தில் 26 வயது உயிரியல் ஆசிரியை பயணம் செய்தது தெரிய வந்துள்ளது.
162 பேருடன் மாயமான ஏர் ஏசியா விமானத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ப்ளோரன்டினா மரியா விடோடோ(26) என்ற உயிரியல் ஆசிரியை பயணம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. குடும்பத்தாரால் டீனா என்று அழைக்கப்பட்ட அவர் சிங்கப்பூரில் உள்ள ஹ்வா சாங் பள்ளியில் உயிரியல் பாடம் பயிற்றுவித்து வந்தார்.

மரியா சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கையில் அவருக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆன்டி பால் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்நிலையில் மரியா சென்ற விமானம் மாயமாகிய செய்தி அறிந்து காதலர் பால் பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து அவர் இந்தோனேசியா கிளம்புகையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மரியா என் காதலி. நான் அவரது குடும்பத்தாரை பார்க்க இந்தோனேசியா செல்கிறேன் என்றார்.
பால் தனது பெற்றோருடன் இந்தோனேசியா செல்கிறார்.












Click it and Unblock the Notifications