மர்மநபர் துப்பாக்கிச் சூடு... வாஷிங்டன் ஆன்ட்ரூஸ் விமானப்படை தளம் மூடல்
வாஷிங்டன்: அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் ராணுவ விமான தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வாஷிங்டன் நகரத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் இன்று துப்பாக்கி சூடும் பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்து. ஆனால் ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இந்த தகவல் ஆண்ட்ரூஸ் விமான தள டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி சூடு காரணமாக விமான தளம் தற்காலிகமாக மூடப்பட்டு, பாதுகாபு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் தான் அதிபர் ஒபாமாவின் அதிகாரபூர்வ ஏர் போர்ஸ் ஒன் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் துருக்கி விமான நிலையத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர். இதனால் உடனடி நடவடிக்கையாக ஆண்ட்ரூஸ் ராணுவ விமான தளம் தற்காலிகமாக மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications