Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஸ்க்கை மறந்ததால்... பதறிய ஜெர்மனி அதிபர்... பாராட்டும் நெட்டிசன்கள் வைரல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: நாடாளுமன்றத்தில் மாஸ்க்கை மறந்ததால் பதறியடித்துக் கொண்டு எழுந்த ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், ஜெர்மனி மற்ற ஐரோப்பிய நாடுகளைவிடச் சிறப்பாகவே கொரோனை வைரசை கட்டுப்படுத்தியது. சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, முறையான கட்டுப்பாடுகள் என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கைகளும் கொரோனா பரவலைக் குறைக்க உதவியது.

Angela Merkel Panicks as she Forgot Her Face Mask

இந்நிலையில், ஏஞ்சலா மெர்க்கல் தனது மாஸ்க்கை அணியாமல் நாடாளுமன்றத்தில் தனது இருப்பிடத்தில் அமர்ந்துவிட்டார். மாஸ்க்கை அணியவில்லை என்பதை சில நொடிகளுக்குப் பின்னரே உணர்ந்த ஏஞ்சலா மெர்க்கல், பதறியடித்தவாறு சென்று மாஸ்க்கை எடுத்து அணிந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதிபராக இருந்தாலும்கூட ஏஞ்சலா மெர்க்கல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

இதன் பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றி ஏஞ்சிலா மெர்க்கல் கொரோனா பரவல் மீண்டும் பரவுவதைத் தடுக்க வரும் மார்ச் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும், அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவில் மேற்கொண்டால் மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக வளரும் நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி விரைவில் சென்றடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பல மாதங்களாக ஜெர்மனி நாட்டில் குறைந்திருந்த கொரோனா பரவல் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அதிகப்படுத்தப்பட்டன.

ஜெர்மனி நாட்டில் தற்போது வரை 23.81 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,050 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல நேற்று மட்டும் 571 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர், இதுவரை 68, 118 பேர் கொரோனா காரணமாக ஜெர்மனியில் உயிரிழந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+