மூடப்பட்ட ராஃபா எல்லை.. தவிக்கும் பாலஸ்தீன மக்கள்! தீர்வு என்ன? பிளிங்கன் சொன்ன 'அந்த' வார்த்தை
காசா: காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருகிறது. இப்படி இருக்கையில் அதன் தெற்கு எல்லையில் உள்ள எகிப்தின் ராஃபா எல்லை மீண்டும் திறக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
பாலஸ்தீனம்: இஸ்ரேலால் காலங்காலமாக ஒடுக்குமுறைக்கும், ஆக்கிரமிப்புக்கும் உள்ளாக்கப்பட்ட பாலஸ்தீனத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று பல்வேறு குரல்கள் எழுந்தன. ஆனால் அகதிகளாக வந்த யூதர்களோ இந்த குரல்களை நசுக்கி இஸ்ரேல் எனும் நாட்டை மேலும் மேலும் விரிவுபடுத்திக்கொண்டே சென்றனர். இதன் விளைவு பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் உருவாகி அது ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தது. இதுதான் சாக்கு என இஸ்ரேலும், மேற்கு நாடுகளும் இந்த அமைப்புகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி அதன் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியது.

10வது நாள்: இதன் தொடர்ச்சியாகதான் பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த 7ம் தேதியன்று பாலஸ்தீன விடுதலை அமைப்பான 'ஹமாஸ்', இஸ்ரேல் மீது மிக கடுமையான பயங்காரவாத தாக்குதலை தொடுத்தது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணை ஏவியதால் இஸ்ரேலின் சில பகுதிகள் பலத்த சேதமடைந்தன. மத்திய கிழக்கில் மிகவும் பாதுகாப்பான நாடாக தன்னை கூறிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு இது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே பதில் தாக்குதலை உக்கிரமாக தொடங்கியிருக்கிறது. இந்த தாக்குதல் 10வது நாளாக இன்று நீடித்து வரும் நிலையில் காசாவில் உயிரிழப்பு 1500ஐ கடந்திருக்கிறது.
காசா: இந்நிலையில் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர இஸ்லாமிய நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால் மோதலை தீவிரப்படுத்தும் விதமாக இஸ்ரேலின் பங்காளி நாடான அமெரிக்கா, தனது போர் கப்பலை காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ளது. மற்றொருபுறம் இளைய பங்காளியான பிரிட்டன் தனது போர் கப்பலை அனுப்ப முயன்று வருகிறது. இவை மத்திய கிழக்கு பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த பலத்தை புரிந்துக்கொண்ட இஸ்ரேல் காசா எனும் பகுதி முற்றிலுமாக தடம் தெரியாமல் அழிக்கப்படும் என்று கூறியுள்ளது.
மேற்கு: இதுவரை வான்வழி தாக்குதலை தொடுத்திருந்த இஸ்ரேல் இப்போது தரை வழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. கடந்த 9 நாட்களாக நடைபெற்று வரும் மோதலில், இஸ்ரேல் ராணுவம் காசாவுக்கு செல்லும் மின்சாரம், குடிநீர் மற்றும் எரிபொருள் ஆகிய இணைப்பை துண்டித்திருக்கிறது. இதன் காரணமாக காசாவின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரமும் இன்னும் 24 மணி நேரத்தில் நிறுத்தப்பட்டுவிடும். அதேபோல மக்கள் தெற்கு நோக்கி நகர வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது. அதற்கு ஏற்றார் போல தெற்கு பகுதியில் குடிநீரை திறந்துவிட்டுள்ளது.
ராஃபா எல்லை: ஆனால் அதே நேரம் தெற்கு நோக்கி செல்லும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் தெற்கு பகுதியில் எகிப்து நுழைவு வாயிலான ரஃபா எல்லையை அந்நாடு மூடியுள்ளது. பாலஸ்தீனியர்கள் அகதிகளாக உள்ளே வருவதை எகிப்து விரும்பவில்லை. இங்கிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஐநா உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து இறக்கியுள்ளது. எனவே இந்த எல்லை திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்நிலையில் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பிளங்கன், "விரைவில் ரஃபா எல்லை திறக்கப்படும்" என்று கூறியுள்ளார். ஆனால் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அவர் எதையும் கூறவில்லை. அதேபோல இந்த விவகாரம் தொடர்பாக எகிப்து மற்றும் ஐநா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "ஹமாஸை இஸ்ரேல் அழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால், காசாவை இஸ்ரேல் கைப்பற்றக்கூடாது" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications