நீதிபதியுடன் "அனுசரித்து"ப் போகாத பெண்ணை பலாத்காரம் செய்த வக்கீல்

Subscribe to Oneindia Tamil

ஓஹையோ, அமெரிக்கா: நீதிபதியின் ஆசைக்கு இணங்க மறுத்த தனது கட்சிக்காரரின் தாயாரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் அமெரிக்க வக்கீல் ஒருவர்.

அதுவும் கோர்ட் வளாகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் வைத்து இந்த அநியாயத்தை அவர் செய்துள்ளார்.

அந்த வக்கீலின் பெயர் ஜேவியர் அர்மெங்கா. 52 வயதாகும் இவரது கட்சிக்காரரின் தாயாரை கோர்ட்டுக்கு அழைத்திருந்தார். அங்குள்ள மாநாட்டு அரங்கத்திற்குக் கூட்டிப் போய், இந்த நீதிபதி எனக்கு வேண்டியவர். அவரிடம் நான் எது சொன்னாலும் கேட்பார். உங்களது மகனுக்கு தண்டனை இல்லாமல் வழக்கை முடிக்க நான் உறுதி தருகிறேன். ஆனால் அதற்கு ஒரு விலை உண்டு.

நீங்கள் அந்த நீதிபதியுடன் ஓரல் செக்ஸில் ஈடுபட வேண்டும். அப்படி நடந்து கொண்டால் வழக்கு உங்களுக்கு சாதகமாக கிடைக்கும் என்றார். இதைக் கேட்டு அப்பெண் அதிர்ச்சி அடைந்தார், முடியவே முடியாது என்று மறுத்து விட்டார்.

இதனால் கோபமடைந்த அந்த வக்கீல் மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தார். ஆனால் அப்பெண் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வக்கீல், கோர்ட் அரங்கம் என்றும் பாராமல் அப்பெண்ணை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸில் அப்பெண் புகார் கொடுத்துள்ளார். அந்த வக்கீல் குறித்து அப்பெண் கூறுகையில், பலமுறை நான் வழக்கு தொடர்பாக ஜேவியரின் அலுவலகம் போயுள்ளேன். அங்கு அவர் பலமுறை என் முன்பு பேன்ட்டை கழற்றி விட்டு நிற்பார். என் முன்பாகவே சுய இன்பம் அனுபவிப்பார். என்னை அதைப் பார்க்க கட்டாயப்படுத்துவார். அநாகரீகமாக நடந்து கொள்வார் என்றார்.

இந்த வக்கீல் மீது ஏற்கனவே சில பெண்கள் பாலியல் புகார்கள் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வக்கீல் உரிமத்தை ரத்த செய்ய தற்போது கோர்ட்டுக்கு பரிந்துரைத்துள்ளதாம் வக்கீல்கள் சங்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+