Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமேனி உயிரிழந்துவிட்டார்.. உறுதி செய்த ஈரான்.. அடுத்து கண்ட்ரோலை எடுக்க போவது யார்? முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரான் உச்ச தலைவர் கமேனி உயிரிழந்ததாக டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பை முதலில் ஈரான் மறுத்திருந்தது. இதற்கிடையே அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் கமேனி உயிரிழந்தது உண்மை தான் என்பதை ஈரான் அரசு ஊடகங்களே உறுதி செய்துள்ளனர். இது மத்திய கிழக்கில் மிகப் பெரிய திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ஈரானைச் சுற்றி அமெரிக்கா தொடர்ந்து தங்கள் படைகளைக் குவித்து வந்தன. இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் ஈரான் மீது அமெரிக்கா மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது.

Ayatollah Khamenei Dead

நெதன்யாகு

ஈரானை சுற்றிலும் முக்கிய பகுதிகளைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளைத் தாக்குதல்களை நடத்தின. தாங்கள் நடத்திய தாக்குதலில் ஈரான் அதிபர் கமேனி கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் முதலில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்தார்.

அவர் அறிவித்த கொஞ்ச நேரத்திலேயே ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதாக டிரம்பும் கூட அறிவித்தார். ஈரான் அதிபர் கொல்லப்பட்டதாகவும் இதன் மூலம் ஈரானியர்களுக்கும் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கும் நீதி கிடைத்துவிட்டதாக டிரம்ப் அறிவித்தார். மேலும், ஈரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்க வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் என்றும் கூட டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

உறுதி செய்த ஈரான்

முதலில் கமேனி மரணத்தை ஈரான் ஊடகங்கள் மறுத்த நிலையில், இப்போது உறுதி செய்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் உச்ச தலைவர் வீரமரணம் அடைந்ததாக அரசு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி (IRIB) செய்து வெளியிட்டுள்ளது.

சமீபத்திய தாக்குதல்களில், கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரன் ஆகியோர் உயிரிழந்ததாக ஈரான் அரசு செய்தி நிறுவனமான பார்ஸ் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய பார்ஸ், கமேனி மருமகளும் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது..

எப்படி தேர்வு செய்யப்படுவார்

ஈரானின் அரசியலமைப்பின் கீழ், 88 மூத்த இஸ்லாமிய அறிஞர்களைக் கொண்ட சக்திவாய்ந்த மதகுருமார் அமைப்பான நிபுணர்கள் சபை தான், அடுத்த யார் தலைவர் என்பதைத் தேர்வு செய்யும். கமேனியின் மகள் உயிரிழந்துவிட்ட நிலையில், அவரது மகன் அடுத்து பவருக்கு வரக்கூடும் என சொல்லப்படுகிறது. இருப்பினும், அவரது நிலை குறித்தும் உறுதியாகத் தெரியாததால், அடுத்த கட்ட முடிவுகளை எடுக்க விரைவில் நிபுணர்கள் சபை கூடவுள்ளது.

அடுத்து யார்?

இதற்கிடையே ஈரானை வழிநடத்த இப்போது ஈரான் அதிபர் பெசஷ்கியான் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மொத்தம் 3 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தான் ஈரானை இப்போது வழிநடத்துவார்கள். நிபுணர்கள் சபை ஒன்றுகூடி அடுத்து உச்ச தலைவரை தேர்வு செய்யும் வரை இந்த குழுவே ஈரானை வழிநடத்தும் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+