லண்டனில் பெண் கொரில்லா குரங்கிற்கு “சிசேரியன்” மூலம் பிரசவம் - புட்டிப் பாலில் உயிர் வாழும் குட்டி
லண்டன்: இங்கிலாந்தில் கொரில்லா குரங்கு ஒன்றிற்கு சிசேரியன் மூலமாக குழந்தை பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அக்குட்டிக் குரங்கு காப்பக வேலையாளர்களின் தீவிர பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்தின் பிரிஸ்ட்டல் நகரில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் கேரா என்ற பெண் கொரில்லா குரங்கு சமீபத்தில் கருத்தரித்தது.

அவதிப்பட்ட கேரா:
பிரசவக்காலம் நெருங்கும் வேளையில் தனது கருப்பையில் வளர்ந்துவந்த அந்த பெண் குட்டியை இயற்கையான முறையில் ஈன்றெடுக்க முடியாத நிலையில் கேரா அவதிப்படுவதை கண்டு அங்கிருந்த பராமரிப்பு பணியாளர்கள் கவலை அடைந்தனர்.

மகப்பேறு நிபுணர் சாதனை:
உடனடியாக விலங்குகளுக்கு பிரசவம் பார்ப்பதில் கைதேர்ந்தவரான மகப்பேறு நிபுணர் டேவிட் காஹில் என்பவர் அங்கு வரவழைக்கப்பட்டார்.

புட்டிப்பால் குடிக்கும் குட்டி:
பெயரிடப்படாத அந்த குட்டியின் உயிரை புட்டிப் பாலின் மூலம் காப்பாற்ற வனவிலங்கு காப்பக ஊழியர்கள் முயற்சித்து வருகின்றனர்.

மனிதனுக்கு நெருக்கமானவை:
கொரில்லா, மனிதர்களுக்கு நெருங்கிய இனமான ஆப்பிரிக்காவில் வாழும் வாலில்லாப் பெரிய மனிதக் குரங்கு இனமாகும். மனிதர்களும் கொரில்லாக்களும் சிம்பன்சி போன்ற இன்னும் ஒருசில விலங்குகளும் முதனி எனப்படும் பேரினத்தைச் சேர்ந்தவை.

சைவமும், அசைவமும்:
பார்ப்பதற்கு கருப்பாய் பெரிய உருவமாய் இருப்பினும், இவை இலை தழை பழம், கிழங்கு உண்ணிகள். என்றாலும் சிறிதளவு பூச்சிகளையும் உண்ணும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications