வங்கதேசத்தில் இந்துக்களுக்கு கட்டுப்பாடு.. நமாஸ் வேளையில் துர்கா பூஜை கொண்டாட தடை.. புது கண்டிஷன்
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இந்துக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அங்கு துர்கா பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு வங்கதேச இடைக்கால அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வங்கதேசம் உருவாக காரணமாக இருந்து உயிர் துறந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு அங்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிராக மாணவர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்திய நிலையில் கடந்த மாதம் 5ம் தேதி வங்கதேச பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

உயிர் பயத்தில் வந்த ஷேக் ஹசீனாவுக்கு மத்திய அரசு தற்காலிகமாக அடைக்கலம் கொடுத்துள்ளது. தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் உள்ளார். முகமது யூனுஷ் அந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.
இந்நிலையில் தான் மாணவர்கள் போராட்டம் மற்றும் இடைக்கால அரசு அமைந்த பிறகு வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், கோவில்கள் சேதப்படுத்தப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி, இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஷிடம் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் உள்ளிட்டவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இருப்பினும் இடைக்கால அரசு என்பது இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் தான் தற்போது வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது வடமாநிலங்களில் துர்கா பூஜை என்பது கோலாகலமாக கொண்டாடப்படும். குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை என்பது ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதேபோல் வங்கதேசத்தில் உள்ள இந்துக்களும் துர்கா பூஜையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு மொத்தம் 33,431 பந்தல்களில் துர்கா பூஜைகள் கொண்டாடப்பட்டது. இந்த முறை 32,666 பந்தல்களில் துர்கா பூஜை கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக தலைநகர் டாக்கா தெற்கு பகுதயில் 157 மண்டபங்கள், வடக்கு பகுதியில் 88 மண்டபங்களில் துர்கா பூஜை நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் 9 ம் தேதி முதல் அக்டோபர் 13ம் தேதி வரை இந்த துர்கா பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வங்கதேசத்தில் இந்துக்கள், இந்து அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது வங்கதேசத்தில் துர்கா பூஜைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை விவகாரத்துறை அட்வைசராக உள்ள ஓய்வு பெற்ற ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛நமாஸ் செய்யும் வேளை மற்றும் Azaan வேளைகளில் துர்கா பூஜை கொண்டாட்டங்களை நிறுத்த வேண்டும். இந்த வேளையில் துர்கா பூஜை, பக்தி பாடல்கள் தொடர்பான ஒலிபெருக்கிகளை ஒலிக்க விடக்கூடாது. மேள தாளங்கள் முழங்க கூடாது.
இதுதொடர்பாக இந்து அமைப்புகளுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பூஜை பந்தல், மண்டபங்களில் 24 மணிநேர பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது'' என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனிஷ் கூறுகையில், ‛‛நாம் மதநல்லிணக்க நாடாக இருக்கிறோம். இதனால் மத நல்லிணக்கத்தை யாரும் சீர்க்குலைக்கும் வகையில் செயல்பட கூடாது. சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது. சட்டத்தை யாரேனும் கையில் எடுத்தால் பதற்றத்தை ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications