இவருதான் பெல்ஜியம் ராஜ்கிரண்.. மனுசன் செஞ்ச காரியத்தை கேட்டா ஆடிப்போயிடுவீங்க!
பெல்ஜியம்: ரஜினி முருகன் படத்தில் ராஜ்கிரண் எப்படி செத்துப்போனதாக உறவினர்கள், சொந்தங்களை நம்பவைத்துவிட்டு கடைசியில் உயிரோடு வருவரோ அப்படி ஒருவர் பெல்ஜியம் நாட்டில் செய்திருக்கிறார்.
தான் இறந்துவிட்டதாக அனைவரையும் நம்ப வைத்துவிட்டு, தனது இறுதிச்சடங்கிற்கு ஹெலிகாப்டரில் வந்து பெல்ஜியத்தை சேர்ந்த டிக்-டாக் பிரபலம் டேவிட் பெர்டான் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஏன்யா இப்படி செஞ்ச என்று கேட்ட போது, உறவினர்கள் தன்னை மதிக்கவில்லை என்பதற்காகவும், உறவுகள் ஒன்றிணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும் இவ்வாறு செய்ததாக கூறியிருக்கிறார் டேவிட்.

சரி விஷயத்தை முழுமையாக பார்ப்போம்.. பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டேவிட் பெர்டான் டிக்டாக்கில் பிரபலமாகி வருகிறார். அவர் பெல்ஜியத்தின் லீஜ் என்ற ஊரில் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்கள், உறவினர்களிடம் தான் செத்துப்போனதாக பிராங்க் செய்துள்ளார். இதற்கு டேவிட்டின் மனைவியும் அவரது குழந்தைகளும் இந்த பிராங்கிற்கு உதவி உள்ளனர்.
டேவிட்டின் மகளோ ஒரு படி மேலே போய் தனது தந்தை இறந்து போனதாக பேஸ்புக்கில் ஒரு பதிவும் வெளியிட்டார். அதில் அப்பா நீங்கள் அமைதியாக ஓய்வெடுங்கள் என்று கூறி அப்பா இறந்து போய்விட்டதாக அறிவித்திருக்கிறார்.
டேவிட் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் இப்படியாக பக்கவாக செட்டப் செய்துவிட்டார்கள். இதனிடையே டேவிட் செத்து போயிட்டாரா என்று அதிர்ச்சியோடும் கண்ணீரோடும் ஓடிய உறவினர்கள் நண்பர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி எல்லாம் செலுத்தி உள்ளார்கள். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்வதற்கு எல்லாம் பெல்ஜியத்தின் லீஜ் நகரில் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
இந்நிலையில் திடீரென அங்கு ஒரு ஹெலிகாப்டர் வருகிறது. காற்றை கிழித்தபடி வந்து இறங்கிய ஹெலிகாப்டரில் இறங்கிய நபரை பார்த்து துக்க வீட்டில் இருந்த அத்தனை பேரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் எனில், ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதே டேவிட் தான். என்னய்யா நீ செத்துட்டதாக சொன்னங்க... உயிரோடு வந்து இறங்குற.. ஏன்யா இப்படி பண்ணுன.. என்று அங்கிருந்தவர்கள் சூழ்ந்து கொண்டு கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு டேவிட்டோ, எல்லாரும் கேமராவ பாருங்க.. நான் செத்துபோனதாக பொய் சொன்னேன். உங்களை எல்லாம் பிராங்க் பண்ணனும்னு இப்படி செஞ்சுட்டேன் என்று கூறியிருக்கிறார். இதனால் அங்கிருந்தவர்கள் கடுப்பானாலும், அவர் உயிரோடு வந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். உறவினர்கள் என்னை மதிக்கவில்லை. உறவுகள் ஒற்றுமையாக வாழணும்னு இப்படி செஞ்சுட்டேன் என்று அவர் காரணம் எல்லாம் கூறியிருக்கிறார்.
ஒரு பக்கம் அவரை கட்டிப்பிடித்து வரவேற்ற உறவினர்கள், மறுபக்கம் மனசுக்குள் திட்டிக்கொண்டே போயிருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதங்களில பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் டேவிட்டை ஏன் உறவினர்கள் மதிக்கவில்லை என்பது இப்போது தெரிகிறது. இப்படி கேவலமனா காரியத்தை செஞ்சா, அவரை பாராட்டவா செய்வாங்க. உறவினர்களிடம் செத்துபோனதாக வேஷம் போடுவதெல்லாம் என்ன மாதிரியான மனநிலை என்று வறுத்தெடுத்து வருகிறார்கள். டேவிட் செய்த செயல் பெல்ஜியத்தை தாண்டி உலகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications