நைஜிரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் மீண்டும் அட்டூழியம்: 80 பேர் பலி; 100 மேற்பட்டோர் படுகாயம் !
மாய்துகுரி: நைஜிரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற தீவிரவாதிகள் தனி நாடு கோரி தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜீன் மாதம் 10 வயது சிறுமி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டவர்களை கடத்திச் செல்லும் போகோ ஹரம் தீவிரவாதிகள், பாலியல் அடிமைகளாகவும், தற்கொலைப் படைத் தாக்குதலுக்கும் உபயோகிக்கின்றனர்.

இந்நிலையில், நைஜிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மாய்துகுரி நகரில் 3 பெண்கள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 80 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாய்துகுரி சந்தை பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் அந்த பகுதியில் உள்ள சோதனைச் சாவடி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும், நைஜிரிய படைகளை இடைமறித்து 10-க்கும் மேற்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தவாரி கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டி தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் 10 குழந்தைகள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications