மேலாடை கூட இல்லாமல்.. வாத்தை காப்பாற்ற கழுகுடன் சண்டை போட்ட இளம் தாய்! கையில் 4 மாத குழந்தை வேறு
ஒட்டாவா: கனடாவில் இளம் தாய் ஒருவர் வீட்டில் வளர்க்கும் வாத்தைக் கழுகிடம் இருந்து காப்பாற்றிய வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.
பெண்கள் குழந்தைகளுக்குக் காக்க எந்தவொரு எல்லைகளுக்கும் செல்வார்கள். அதிலும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைக் காக்கச் செய்யும் செயல்கள் பலரும் வியக்கத்தக்க வகையிலேயே இருக்கும்.
அப்படி தான் கனடா நாட்டில் இளம் பெண் ஒருவர், தனது வீட்டில் வசிக்கும் செல்ல வாத்தைக் கழுகிடம் இருந்து காப்பாற்றிய வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.

கனடா
கனடாவில் உள்ள வடக்கு சன்னிச் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கெய்ட் ஓக்லி. இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. இவர்கள் வீட்டில் செல்ல பிராணியாக வாத்து ஒன்றை வளர்த்து வருகின்றனர். சமீபத்தில் இவர் வீட்டின் உள்ளே தனது குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டு இருந்தார். அப்போது இவர்களது வாத்து வெளியே திரிந்து கொண்டு இருந்தது.

வாத்து
அந்தச் சமயத்தில் எங்கோ இருந்து வந்த கழுகு ஒன்று வாத்தின் கழுத்தைக் கவ்விச் செல்ல முயல்கிறது. அந்த கழுகிடம் இருந்து தப்பிக்க வாத்து எவ்வளவோ முயல்கிறது. இருப்பினும், அந்த வாத்தால் இது முடியவில்லை. வீட்டின் உள்ளே தனது 4 மாத குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டு இருந்த கெய்ட் ஓக்லி, இதைப் பாதுகாப்பு கேமராவில் பார்த்துப் பதறிவிட்டார்.

மேலாடை இல்லாமல்
மேலாடை எதுவும் போடாமல் வெறும் டிரவுசரை மட்டுமே போட்டு இருந்த அந்தப் பெண் உடனடியாக கழுகை விரட்ட வெளியே வந்தார். மேலாடை எதுவும் அணியாமல் தனது 4 மாத குழந்தையை மார்பில் அணைத்தபடியே வெளியே வந்த அந்தப் பெண் கழுகிடம் இருந்து வாத்தைக் காப்பாற்றுகிறார். "எனது வாத்தை விட்டுச் சென்றுவிடு" என்று அந்தப் பெண் கத்துவதும் தெளிவாகப் பதிவாகி உள்ளது.

வீடியோ
இந்த வீடியோவை அந்தப் பெண்ணே தனது டிக்டாக் தளத்தில் பகிர்ந்து உள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று கோழிகளைக் கழுகு பிடித்துச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், "இந்த முறை வாத்தைப் பிடித்துச் செல்ல முயன்றது. இதைப் பார்த்ததும் வாத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று மட்டுமே எனக்குத் தோன்றியது. இதனால் தான் மேலாடை கூட போட்டுக் கொள்ளாமல், வெளியே சென்று வாத்தைக் காப்பாற்றினேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பாராட்டு
அந்த தாயின் செயலை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். 4 மாத குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டு இருக்கும் போதும் கூட வாத்தைக் காப்பாற்றப் போராடிய அந்தப் பெண் உண்மையில் ஒரு சூப்பர் மாம் என்றும் பாராட்டித் தள்ளி வருகின்றனர். மேலும், இந்த வீடியோவும் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications