அமெரிக்கா, ஜி7 எல்லாம் ஓரம்போ.. பிரமாண்டமாக வளரும் பிரிக்ஸ்! ஆசியா இனி நம்ம கட்டுப்பாட்டில்தான்
பெய்ஜிங்: அமெரிக்காவின் வரி சர்வதேச வர்த்தக போரை தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு மாற்றாக ஆசிய நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைந்து வருகின்றன. ஆசியா இனி பிரிக்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், இது இந்தியாவுக்கு கணிசமான அளவுக்கு பலன் கொடுக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவுக்கும் வரி அச்சுறுத்தலை அமெரிக்கா கொடுத்திருக்கிறது என்பதால், பிரிக்ஸ் கூட்டமைப்பு நம்மை காப்பாற்றும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"உலகம் முழுவதும் உள்ள செல்வ வளத்தை எல்லோருக்குமானதாக மாற்ற வேண்டுமெனில் பணக்காரர்களுக்கு வரியை போடுங்கள்" என்று பிரபல பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி கூறியிருக்கிறார். ஆனால் நம்மை போன்ற சாதாரண நாடுகளும், புதியதாக வளர்ந்த நாடுகளுக்கும் அமெரிக்கா அதிக வரியை போட தயாராகியிருக்கிறது. அப்படியெனில் மீண்டும் ஒரே இடத்தில் செல்வம் குவிய போகிறது என்று அர்த்தம்.
இதற்கு எதிராகத்தான் பிரிக்ஸ் அமைப்பு விரிவடைய தொடங்கியுள்ளது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிவை சேர்ந்ததுதான் பிரிக்ஸ் அமைப்பு. இதில் மிக சமீபத்தில் இந்தோனேஷியா உறுப்பினராக இணைந்தது. அதனை தொடர்ந்து மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய ASEAN (தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு) நாடுகளும் இணைந்தன. எனவே பிரிக்ஸ் தற்போது வலிமையடைந்திருக்கிறது.
இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் வலுவான தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப வளங்களை கொண்டிருக்கின்றன. இவை உலகளாவிய வர்த்தகச் சங்கிலியில் (Global Supply Chains) முக்கியமான இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகள் பிரிக்ஸில் இணைந்ததன் மூலம் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மேலும் விரிவடையும். இந்த வர்த்தக விரிவாக்கத்திற்கு சீனாவின் சில திட்டங்கள் உதவியாக இருக்கும்.
1. சீனா-லாவோஸ் (China-Laos) ரயில் பாதை - தாய்லாந்து மற்றும் மலேசியாவை இணைக்கும் முக்கிய திட்டமாக விளங்குகிறது
2. ஜகார்த்தா-பாண்டுங் (Jakarta-Bandung) அதிவேக ரயில் பாதை - இந்தோனேசியாவில் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டது, இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
இந்த இரண்டு திட்டங்களும் பிரிக்ஸ் நாடுகளை முழுமையாக இணைக்கும் திட்டமாக பார்க்கப்படுகிறது. இத்திட்டங்கள் பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்தும். ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தால் பிரிக்ஸ் நாடுகளால் நிலையான வளர்ச்சியை எட்ட முடியும். நிலையான வளர்ச்சி எனில், அது இந்தியாவுக்கும் பலனை கொடுக்கும். நாம் ஒவ்வொரு விஷயத்திற்கும் அமெரிக்காவையோ, ஐரோப்பிய நாடுகளையோ நம்பியிருக்க முடியாது.
அமெரிக்காவின் வரி மிரட்டல்கள் பிரிக்ஸ் நாடுகளை இணைக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக ஆசியாவில் உள்ள செல்வம் எல்லாம் அனைத்து நாடுகளுக்கும் பரவலாக்கப்படும். சமத்துவம் வந்துவிட்டால் போருக்கோ, தீவிரவாத நடவடிக்கைக்கோ இங்கு இடம் இருக்காது என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications