இந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான மலேசிய விமானம் தீப்பிடித்து எரிந்ததை பார்த்த இங்கிலாந்து பெண்
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் தீப்பிடித்து எரிந்ததை தான் பார்த்ததாக இங்கிலாந்தைச் சேர்ந்த கேத்ரீன் டீ என்பவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. இதையடுத்து விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்தது. இருப்பினும் இந்திய பெருங்கடலில் 3 மாதமாக தேடி வரும்போதிலும் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மாயமான விமானம் எரிந்ததை தான் பார்த்தாக இங்கிலாந்தைச் சேர்ந்த கேத்ரீன் டீ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நானும் என் கணவர் மார்க் ஹார்னும் விடுமுறையை கழிக்க சென்றோம். நாங்கள் கொச்சியில் இருந்து தாய்லாந்தில் உள்ள புகெட்டுக்கு படகில் சென்றோம். அப்போது இந்திய பெருங்கடலில் செல்கையில் இரவு நேரத்தில் படகில் இருந்தவர்கள் தூங்கிவிட்டனர். அப்போது நான் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததை பார்த்தேன். அது வழக்கமான விமானத்தைவிட பெரிதாக இருந்தது. அதில் இருந்து கரும்புகை வந்தது என்றார்.
இது குறித்து கேத்ரீனும், அவரது கணவரும் விமானத்தை தேடும் குழுவிடம் தெரவித்துள்ளனர். மாயமான விமானம் சென்ற பாதையில் தான் அவர்களின் படகு சென்றுள்ளது. அதனால் தீப்பிடித்து எரிந்தது மாயமான மலேசிய விமானமாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications