பிறந்த குழந்தையை பேப்பரில் சுற்றில் வெளியில் வீசிய பெண்.. சிசு பரிதாப மரணம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் ஒரு 18 வயதுப் பெண் தனது முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட உறவின் காரணமாக பிறந்த சிசுவை பேப்பரில் சுற்றி பையில் போட்டு வெளியே வீசி விட்டார். பிறந்த சில மணி நேரங்களிலேயே அந்த சிசு பரிதாபமாக உயிரிழந்து போனது.

Chicago girl wraps newborn boy in bag and leaves him outside to die: police

அந்தப் பெண்ணைப் போலீஸார் கைது செய்துள்ளனர். சிகாகோவைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் அனா ரோசா மோரா. என்ன கொடுமை என்றால் பிறந்த குழந்தை, அந்தப் பெண்ணின் முன்னாள் காதலனின் முக ஜாடையில் இருந்ததாம். இதனால் தற்போதைய காதலன் கோபப்பட்டு தன்னை விட்டுப் பிரிந்து போய் விடுவானோ என்று பயந்து குழந்தையை இப்படிக் கொன்றுள்ளார் அந்த இரக்கமற்ற பெண்.

தற்போது அனா மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவருக்கு கடும் தண்டனை வாங்கிக் கொடுக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் பெண் பள்ளியில் படித்து வரும் மாணவியும் கூட. குழந்தையைக் கொன்று விட்டு படு கூலாக அடுத்த நாள் பள்ளிக்கும் போய் விட்டார் அனா. பள்ளிக்குப் போன இடத்தில் தனக்குப் பிறந்த குழந்தையின் படத்தையும், இதுதான் எனது குழந்தை என்று பள்ளிக்கூடத்தில் அனைவரிடமும் காட்ட வேறு செய்துள்ளார் சற்றும் சலனம் இல்லாமல்.

குழந்தையை ஒரு கட்டுமானத் தொழிலாளர் பார்த்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கவே குட்டு அம்பலமாகி அனா கைதானார்.

பரிதாபத்துக்குரிய அந்தக் குழந்தை மூச்சுத் திணறலால் உயிரிழந்திருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். தற்போது அனா ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். பள்ளிக்கும் போய் வருகிறார்.

காமத்திற்குப் பிள்ளை பெற்ற அனாவுக்கு தாய்மையின் அருமையும், பெருமையும் தெரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லைதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+