பாகிஸ்தானில் தர்பூசணி திருடியதற்காக 2 சிறுவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்
லாகூர்: பாகிஸ்தானில் தர்பூசணி திருடியதற்காக இரண்டு சிறுவர்களை அடித்து நொறுக்கி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரைச் சேர்ந்தவர்கள் பஷாரத், இர்ஃபான். அவர்களின் கடையில் இருந்து தர்பூசணிகளை 2 சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிவிட்டனர். 9 மற்றும் 13 வயதாகும் அந்த சிறுவர்களை பஷாரத் மற்றும் இர்ஃபான் கையும், களவுமாக பிடித்து அடித்து நொறுக்கினர். அவர்களுடன் சேர்ந்து அவர்களின் உதவியாளரும் சிறுவர்களை தாக்கினார்.

மேலும் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து அவர்களை அப்படியே ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவர்களை தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பஷாரத், இர்ஃபான் மற்றும் அவர்களின் உதவியாளரை கைது செய்தனர். சிறுவர்களை கொடுமைப்படுத்தியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications