சத்தமில்லாமல் பூடானை கபளீகரம் செய்ய முயற்சி.. காட்டிக் கொடுத்த சேட்டிலைட் படங்கள்.. சிக்கிய சீனா
திம்பு: பூடான் நாட்டுடன் ஒருபக்கம் எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே இன்னொரு பக்கம் அந்த நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஆக்கிரமிப்பை சீனா மேற்கொண்டு வருவது செயற்கைகோள் படங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
உலக அளவில் அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சீனா, ஆசியாவில் யாராலும் அசைக்க முடியாத வல்லமை பொருந்திய நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற கனவுடன் வலம் வருகிறது. சீனாவின் இந்த கனவுக்கு இந்தியாதான் கடும் போட்டியாக உள்ளது. தெற்காசியா நாடுகளை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் சீனாவிற்கு இந்தியா கடும் சவாலாக உள்ளது.

ஆசியாவில் மட்டும் இன்றி சர்வதேச அளவிலும், பொருளாதார ரீதியாக இந்தியா சீனாவுக்கு கடும் போட்டியாக உள்ளது. இதனால், இந்தியா மீது எரிச்சல் அடையும் சீனா, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேசத்தை தெற்கு தீபெத் என சொல்லிக்கொண்டு உரிமை கொண்டாடும் சீனா, அவ்வப்போது எல்லையில் அத்துமீறி வருகிறது.
பூடானில் ஆக்கிரமிப்பு: இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அருணாசல பிரதேசத்தை ஒட்டி நவீன குடியிருப்புகளை அமைப்பது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவும் சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையில் தற்போது எல்லையில் நவீனமான முறையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தான் தற்போது சீனா, பூடானில் சில ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ள முயற்சித்து வருவது தெரியவந்துள்ளது. பூடானின் வடகிழக்கு பகுதியில் சட்ட விரோதமாக ஊடுருவ முயற்சி மேற்கொண்டு வருவது செயற்கை கோள் படங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. பூடானின் கேன் பஜோங் பிராந்தியத்தில் உள்ள பேயுல் ஆற்று பள்ளத்தாக்கில் நகர குடியிருப்புகளை சீனா அமைத்து வரும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

நெருக்கடி கொடுக்கும் சீனா: இந்திய தலைநகர் டெல்லியின் நான்கில் ஒரு பங்கு மட்டுமே மக்கள் தொகை கொண்ட குட்டி நாடுதான் பூடான். அதாவது அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 8 லட்சம் தான். இந்த குட்டி நாடான பூடானை சுரண்டி ஆக்கிரமிப்பதன் மூலம் இந்தியாவுக்கு பூகோள ரீதியாக நெருக்கடி கொடுக்க சீனா முயற்ச்சிப்பதாக சர்வதேச வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
பிராந்திய நலனை உறுதி செய்வோம்: பூடானுடன் ஒருபக்கம் எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மற்றொரு பக்கம் சீனா இப்படி கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இந்தியாவுக்கான பூடான் தூதர், "தற்போதைய எல்லை பேச்சுவார்த்தை தொடர்பாக ஊடகங்களிடம் பேசக்கூடாது என்பது எங்கள் கொள்கையாக இருந்தாலும் பூடானின் பிராந்திய நலனை உறுதி செய்வோம் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்" என்றார்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications