சீன நிலநடுக்கம்: உயிரிழப்பு 589 ஆக அதிகரிப்பு; காயம் 2,400

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: சீனாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 589 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 2,400 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டின் அதிக்காரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின், தென்மேற்கில் உள்ள யுனான் மாகாணத்தில், ஞாயிறன்று, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில், 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், ஆயிரக்கணக்கான கட்டடங்கள் குலுங்கின. ஏராளமான வீடுகள், அலுவலகங்கள் தரைமட்டமாயின.

நிலநடுக்கத்தை தொடர்ந்து, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராணுவ வீரர்கள், போலீசார், தீயணைப்பு படையினர் உள்ளிட்ட, 4,000 வீரர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 80 ஆயிரம் வீடுகள், கடுமையாக சேதமடைந்துள்ளன. 1.24 லட்சம் பேர், தங்கள் உடைமைகளை இழந்து உள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை தொடர்ந்து மீட்கும் பணி மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

உயிரிழப்பு அதிகம்

உயிரிழப்பு அதிகம்

நிலநடுக்கத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 589 என்று சீன அரசு தெரிவித்துள்ளது. மேலும் 2,400 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும், இன்னும் பலரது நிலைபற்றித் தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகளில் ஆயிரக்கணக்கான குழுக்களும், நூற்றுக்கணக்கான தனியார் தொண்டு நிறுவன ஆர்வலர்களும் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர்.

குடியிருப்புகளுக்கு ஆபத்து

குடியிருப்புகளுக்கு ஆபத்து

மலைப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதன் இடுபாடுகள் காரணமாக ஆறுகளிலிருந்து தண்ணீர் வெளியேறுவது தடைப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மீட்புப் பணியில் இடையூறு

மீட்புப் பணியில் இடையூறு

தொடர் நிலச்சரிவுகள் ஏற்படுவதினாலும், மழையினாலும் மீட்பு பணிகள் பாதிக்கப்படுகின்றன. இருப்பினும் இடையூறுகளை பொருட்படுத்தாமல் மீட்பு நடவடிக்கை தொடர்கிறது.

மண்ணில் புதைந்த சாலைகள்

மண்ணில் புதைந்த சாலைகள்

பல சாலைகள் மண்ணுக்குள் புதைந்ததால் பல நகரங்களின் தடமே மாறி உள்ளன. இதனால் ஆம்புலன்ஸ்கள், மக்களுக்கு உணவு கொண்டு செல்வது என அனைத்திலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் உணவு பொருட்கள் மற்றும் மருந்துகளை நடந்து சென்றே மக்களுடம் கொண்டு சேர்க்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+