அமெரிக்கா இதை எதிர்பார்த்திருக்காது.. டிரம்பிற்கு எதிராக கேஸ் போடும் சீனா.. உலக அரசியலில் ட்விஸ்ட்
பெய்ஜிங்: அமெரிக்கா விதித்த வரி விதிப்புகளுக்கு எதிராக சீனா கடுமையான பதிலடி தரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு அமெரிக்காவிற்கு எதிராக உலக வர்த்தக சபையில் புகார் அளிப்போம்.. வழக்கு தொடுப்போம் என்று சீனா எச்சரித்து உள்ளது.
சீனாவிற்கு எதிராக டிரம்ப் 10% வரி விதித்துள்ளார். இது உலக வர்த்தக விதிகளுக்கு எதிரானது. அதனால் உலக வர்த்தக சபையிடம் நாங்கள் புகார் அளிப்போம். அவருக்கு எதிராக வழக்கு தொடுப்போம். அதை தொடர்ந்து அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று சீனா எச்சரித்து உள்ளது.

சீனா அமெரிக்கா மோதல்: அமெரிக்காவிற்கு வரி மூலமாக அழுத்தம் கொடுக்கும் நாடுகள் மீது கடுமையான வரி விதிப்பை மேற்கொள்ள போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த எச்சரிக்கையை டிரம்ப் குறிப்பிட்டுள்ள நாடுகளில் இந்தியாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. முதல் கட்டமாக சீனா மீது 10% வரியை டிரம்ப் விதித்துள்ளார்.
சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை அதிக வரி விதிக்கும் நாடுகள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நாடுகள் மீது நாங்கள் கூடுதல் வரிகளை விதிக்கப் போகிறோம், இந்த நாடுகள் பொதுவாக எங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நாடுகள்.
அவர்கள் தீங்கு விளைவிக்கிறார்கள் என்றாலும்.. தங்களுக்கு தேவையான, தங்கள் நாட்டிற்கு தேவையான செயலில் ஈடுபடுகிறார்கள். பிற நாடுகளின் பொருட்களுக்கு வரி விதித்து அதன் மூலம் வரும் வருவாயை தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அப்படித்தான் நாங்களும்.. பிற நாடுகளுக்கு முக்கியமாக எங்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் நாடுகளுக்கு நாங்களும் கூடுதல் வரிகளை விதிப்போம்.
மற்ற நாடுகள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். சீனா ஒரு மிகப்பெரிய நாடு.. அவர்கள் மற்ற நாடுகள் மீது மிக மிக அதிக அளவில் வரியை விதிக்கிறார்கள். இந்தியா, பிரேசில் மற்றும் பல நாடுகள் இதேபோல் கூடுதல் வரியை விதிக்கிறார்கள். எனவே அமெரிக்காவை முதலிடத்தில் வைக்க நாமும் இனி வரி விதிக்க வேண்டும்.
பிளான் என்ன?
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவிகிதம் வரி போடுவேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார். டிரம்ப்பின் எச்சரிக்கைக்கு பதிலடி தரும் விதமாக பிரதமர் மோடி தலைமையிலான டீம் முக்கியமான சில திட்டங்களை வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு பயங்கரமான எச்சரிக்கை ஒன்றை விடுத்து உள்ளார். டாலர் வர்த்தகத்தில் இருந்து வெளியேற நினைத்தால், டாலர் வர்த்தகத்தை குறைத்தால் 100% வரி விதிப்பை மேற்கொள்வோம் என்று அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது போக டாலர் வர்த்தகம் தாண்டி, இந்தியாவின் வரி விதிப்பு முறையை காரணம் காட்டி இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது 20% கூடுதல் வரியை விதிக்கவும் டிரம்ப் முயல்வார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கனடா, மெக்சிகோ மீது அவர் விதிக்கும் 20% வரி இந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அமலுக்கு வருகிறது. மேலும் சீனா மீதான வரியை அடுத்த வாரம் அறிவிப்பார். அதன்பின் இந்தியா மீதான வரியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .












Click it and Unblock the Notifications