ஹார்முஸ்-ஐ விட்ராதடா தம்பி.. ஈரானுக்கு சீனா சொன்ன முக்கிய விஷயம்.. அமெரிக்கா ரியாக்ஷன் என்ன?

Subscribe to Oneindia Tamil

உலக நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி எரிபொருளின் சுமூகமான போக்குவரத்தை நம்பிதான் உள்ளது என்பதை ஈரான் போர் படம் போட்டு காட்டியுள்ளது. கடல் வழி போர்குவரத்தில் ஏற்படும் சிறிய இடையூறுகள் கூட உலகளாவிய வர்த்தகத்தையும், எரிபொருள் விலைகளையும் பெரிதாக பாதிக்கும் என ஹார்முஸ் பிரச்சனை காட்டியுள்ளது.

இத்தகைய முக்கியமான கடல் பாதையில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் வேளையில் ஈரான் போரில் சீனா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

Iran War China USA trump Strait of Hormuz China Iran Diplomacy US Iran Tensions Global Oil Supply Hormuz Shipping Safety china urges iran strait of hormuz safe shipping hormuz china request us iran tensions 2026 strait of hormuz oil route disruption china iran oil imports safety hormuz chokepoint global energy crisis pakistan mediated us iran talks iran nuclear program hormuz control world oil prices hormuz blockage beijing calls for hormuz stability international shipping lane protection iran delicate us iran negotiations islamabad china balanced stance iran security global economy impact hormuz tensions peaceful solution strait of hormuz

சீனா தனது முக்கிய கச்சா எண்ணெய் சப்ளையாரான ஈரானுக்கு, ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா உடன் நீடித்து வரும் பதற்ற சூழ்நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சீனா, ஈரானிலிருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்த பாதையில் ஏற்படும் தடை தனது எரிசக்தி தேவையை பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தில் உள்ளது.

இதேவேளையில் ஹார்முஸ் வழித்தடத்தில் அமெரிக்காவின் செயல்பாட்டை சீனா கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் இஸ்ரேல், அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையின் போதும் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்து வருகிறது.

சீனா இந்த பிரச்சனையில் முழுமையாக இறங்காமல் பொதுநலத்திற்காக பேசி வருகிறது. ஒரு புறம், ஈரானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு மதிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. மறுபுறம், உலக நாடுகள் சார்ந்திருக்கும் கடல் போக்குவரத்து தடையின்றி நடைபெற வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. இதேபோல் சீனா ஈரானுக்கு ஆயுதம் சப்ளை செய்வதாக அமெரிக்கா கூறியதையும் சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதே நேரத்தில் பதற்றத்தை குறைக்க பல நாடுகள் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்து வருகின்றன. பாகிஸ்தான் இந்த முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான விவாதங்களை மீண்டும் தொடங்க உதவி செய்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் 2வது கட்ட பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளன, இந்த முறை ஜெனிவா நாட்டிலும் பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஈரானின் அணு சக்தி தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் அமைதியான தீர்வு காண்பதே இந்த பேச்சுவார்த்தைகளின் நோக்கம்.

அமெரிக்க கடற்படையின் பிளாக்கேட் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது, ஈரான் தனது ஹார்முஸ் பலத்தை இழந்து நிற்கிறது. இதனால் 2வது கட்ட பேச்சுவாரத்தையில் அமெரிக்காவில் கை ஓங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் சீனாவின் எண்ணெய் கப்பல் செவ்வாய்க்கிழமை ஈரான் கடற்கடையில் இருந்து வெளியேற முயற்சி செய்த போது அமெரிக்க கடற்படைகள் முடங்கி மீண்டும் திருப்பி அனுப்பியது. இந்த நிலையில் சீனா ஈரான் போர் விவகாரம் தொடர்பாக நேரடியாக பேச்சுவார்த்தையும், கருத்துகளையும் முன்வைக்க துவங்கியுள்ளது.

தற்போது ஈரான் போர் நிலைமை மிகவும் நுட்பமான கட்டத்தில் உள்ளது. பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றால் சூழல் மேம்படலாம். ஆனால் பதற்றம் அதிகரித்தால் பிரச்சனை மேலும் மோசமாகலாம். சீனா இன்னும் அமைதிக்கு வாய்ப்பு இருப்பதாக நம்புகிறது. ஆனால் அனைத்து தரப்பினரும் கவனமாக செயல்பட்டு, தொடர்ச்சியான பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+