பாஸின் அனுமதி இல்லாமல் பெண் ஊழியர்கள் கர்ப்பமானால் கருக்கலைப்பு தண்டனை.. சீன வங்கி அராஜகம்!
மேலதிகாரியின் அனுமதி இல்லாமல் கர்ப்பமானால், கருக்கலைக்க சொல்லி அராஜகம் செய்து வந்துள்ளது சீன வங்கி ஒன்று.
Recommended Video

பெய்ஜிங்: மேலதிகாரியின் அனுமதி இன்றி கர்ப்பம் ஆகும் பெண்களை, கருக்கலைக்கச் சொல்லி உத்தரவிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது சீனாவில் இயங்கி வரும் பிரபல வங்கி ஒன்று.
சம்பந்தப்பட்ட வங்கியானது சீனாவின் ஷிஜாஹுயாங் பகுதியில் இயங்கி வருகிறது. இங்குப் பணி புரியும் பெண்களிடம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஒரு அப்ளிகேஷன் அளிக்கப்படுமாம். அதில், இந்தாண்டு அவர்கள் கருத்தரிக்கும் எண்ணம் உள்ளதா எனக் கேட்கப்பட்டிருக்கும். அதை அங்குள்ள பெண் ஊழியர்கள் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

அவர்களில் அந்தாண்டு கர்ப்பம் தரிக்க விருப்பம் தெரிவித்துள்ளவர்களின் பெயர்களை உயரதிகாரிகள் பரிசீலனை செய்வார்கள். பின்னர் அவர்களில் சிலருக்கு மட்டும் கர்ப்பம் தரிக்க அனுமதி அளிக்கப்படும். ஆனால் அதை மீறி மேலதிகாரியின் அனுமதி பெறாமல் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்பது அவர்களது விதிமுறை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் தொழிலாளர் சங்கத்தின் உதவியை நாடினார் அந்த வங்கியில் பணி புரியும் பெண் ஒருவர். அதன் மூலம் இந்த விசயம் வெளிச்சத்திற்கு வந்தது.
உரிய அனுமதியின்றி கர்ப்பம் தரிக்கும் பெண்கள் ஒன்று தங்களது கர்ப்பத்தை கலைத்துக் கொள்ள வேண்டும், அல்லது அபராதம் செலுத்த வேண்டும் என்பது தான் சம்பந்தப்பட்ட வங்கி தரும் தண்டனையாம்.
இந்த நெருக்கடியான கட்டுப்பாட்டுக்கள் இயங்கும் பெண்களுக்கு ஆதரவாகவும், சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்துக்கு எதிராகவும் சமூக வலைதளத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications