‘நானும் கருப்பு, என் பொண்டாட்டியும் கருப்பு... ஆனா, என் குழந்தை மட்டும் எப்படி சிவப்பா பிறந்தது..?’!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: ‘நானும் கருப்பு, என் பொண்டாட்டியும் கருப்பு... ஆனா, என் குழந்தை மட்டும் எப்படி சிவப்பா பிறந்தது..?' என முதல் மரியாதைப் படத்தில் வினோதமான வழக்குடன் பஞ்சாயத்துக்கு வருவார் ஜனகராஜ்.

அந்த நகைச்சுவைக் காட்சி போலவே, சீனக் கணவர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தை மீது விநோதமான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அவர் ‘ தன் மனைவி மிகவும் அழுக்கான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் அந்த பாசத்திற்குரிய அப்பா.

வடக்கு சீனாவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் பெங் ஜியான் என்பவர் தான் தன் மனைவி மீது இப்படி ஒரு வழக்குத் தொடுத்துள்ளார். ஏற்கனவே ஜியானுக்கும், அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகி விட்டது. ஆனபோதும் தன் மனவிக்கு கள்ளத் தொடர்பு மூலம் அக்குழந்தை பிறந்திருக்கக் கூடும் என ஜியான் சந்தேகம் தெரிவித்திருந்தார்.

ஆனால், மரபணு சோதனையில் அக்குழந்தை தந்தை ஜியான் தான் என்பது உறுதியானது. ஆனபோதும், தனது மனைவி ஏற்கனவே செய்து கொண்ட பிளாஸ்டிக் சர்ஜரியை தன்னிடம் மறைத்ததாகவும், அதன் காரணமாகவே அவருக்குப் பிறந்த அக்குழந்தை விவரிக்க இயலாத அளவிற்கு அழுக்காக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார் ஜியான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+