மிரட்டிய "ராய்".. தூக்கி வீசப்பட்ட மக்கள்.. உருக்குலைந்த ஊர்கள், பிலின்பைன்ஸ் புயலுக்கு 208 பேர் பலி
ராய் புயல் காரணமாக 208 பேருக்கு மேல் பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்துள்ளனர்
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய கடும்புயல் காரணமாக, 208 பேருக்கு மேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. இந்த பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என்கிற அச்சமான சூழல் அங்கு நிலவுகிறது.. முழுவீச்சில் ராணுவமும் போலீசும் மக்களை மீட்கும் பணியில் இறங்கி உள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்களை ஒரு சக்தி வாய்ந்த புயல் தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது.. அந்த புயலுக்கு "ராய்" என்று பெயர்..
மணிக்கு 121 கிமீ முதல் 270 கிமீ வரை சூறாவளி காற்று சுழன்று சுழன்று அடித்தது.. இப்படி ஒரு சக்திவாய்ந்த புயல் சமீபத்திய வருடங்களில் பிலிப்பைன்ஸை தாக்கியதில்லை..

போஸ்ட் கம்பங்கள்
அதுவும் 2 நாட்களாகவே புயல் வீசி கொண்டே இருந்திருக்கிறது.. இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன... போஸ்ட் கம்பங்கள் சரிந்து விழுந்தன.. வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன... நடுக்கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.. கரையில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகள் தூக்கி வீசப்பட்டன.. அவை அங்கிருந்த கடலிலேயே மூழ்கிவிட்டன.. புயலுக்கு பின்னாடியே பேய் மழை விரட்டி கொண்டுவந்தது.. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன..

விவசாய பயிர்கள்
அந்த வெள்ளத்தில் எண்ணற்ற கால்நடைகள் உயிருடன் அடித்து செல்லப்பட்டன... வாகனங்கள் நீரில் மிதந்தன.. புயல் காரணமாக 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் மின்வினியோகம் தடைபட்டு உள்ளது... தகவல் தொடர்பு சேவையும் முற்றிலும் முடங்கி போய்விட்டது.. வெள்ள நீரில் லட்சக்கணக்கில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் நாசமாயின... இந்த புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து அந்த நாட்டு மக்கள் மீளவில்லை.. பீதியில் உறைந்து போயுள்ளனர்.. சுமார் 8 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

முகாம்கள்
3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வீடுகள் இல்லை.. அவர்கள் எல்லாம் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.. இந்த புயலில் போஹோல் பகுதிதான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது... அங்கு மட்டும் ராய் புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. ஏராளமானோரை காணவில்லையாம்.. பலர் காயமடைந்துள்ளனராம்.. அவர்களை மீட்டு சிகிச்சை தரப்பட்டு வருகிறது. அதேபோல, பல்வேறு மாகாணங்களில் மக்கள் புயலில் சிக்கி உள்ளனர்..

ராணுவம்
இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 208-ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது.. ஆனால், இந்த பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என்கிறார்கள்.. காரணம், பல்வேறு மாகாணங்களில் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு உள்ளதால், இறப்பு எண்ணிக்கை முழுமையாக வந்து சேரவில்லை... முழுவீச்சில் மீட்பு பணிகள் பிலிப்பைன்ஸில் நடந்து கொண்டிருக்கிறது.. போலீஸ், ராணுவம், தீயணைப்பு துறை, கடலோர காவல் படை வீரர்கள் மிக மிக தீவிரமாக மக்களை காக்க தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்..!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications