உக்ரைன் எல்லைக்கே போன அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. ஏவுகணைகளை தடுக்க ஸ்பெஷல் ஏற்பாடு.. பரபரத்த ராணுவம்
வார்சாவா: போலந்து நாட்டின் உக்ரைன் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமெரிக்க படையினருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து இருக்கிறார்.
உலக வரலாற்றிலேயே நல்ல முறையில் நடந்துகொண்ட படை இதுதான் என அவர் பாராட்டி உள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் சூழலில் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பெல்ஜியம் தலைநகர் ப்ரெசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

போலந்தில் ஜோ பைடன்
இதன் பின்னர் உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு சென்ற ஜோ பைடன், உக்ரைனிலிருந்து தப்பி போலந்துக்கு அகதிகளாக வந்தவர்களை சந்தித்ததுடன் அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள் குறித்தும் எதிர்கால திட்டமிடல் குறித்தும் ஆலோசித்தார். அப்போது அங்கிருந்த அமெரிக்க படைகளிடம் பேசிய அதிபர் ஜோ பைடன், மிக முக்கியமான பணிகளில் அவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், ஜனநாயகத்தை பாதுகாத்து வருவதாகவும் கூறினார்.

உக்ரைன் எல்லை வரை சென்ற ஜோ பைடன்
"நான் உங்களை ஒரே ஒரு சாதாரண காரணத்துக்காகவே இங்கு சந்திக்க வந்து உள்ளேன். அது உங்களுக்கு நன்றி சொல்வதற்காக. நன்றி! நன்றி! உங்கள் சேவைக்கு மிக்க நன்றி! நீங்கள் யார் என்று உணர்ந்ததற்கு நன்றி. நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணிக்கு நன்றி" என்று அதிபர் ஜோ பைடன் உக்ரைன் எல்லையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள போலந்து நகரான செஸ்சோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க படைவீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அமெரிக்க படைகளுடன் செல்பி
அத்துடன் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க படைகளுடன் ஒன்றாக அமர்ந்து பீசா சாப்பிட்ட ஜோ பைடன், செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார். அதை ட்விட்டரில் பகிர்ந்த அவர், "இன்று பிற்பகல், போலந்தில் உள்ள 82வது வான்வழிப் பிரிவின் உறுப்பினர்களைச் சந்தித்தேன். இவர்கள் நேட்டோவின் பாதுகாப்பை வலுப்படுத்த போலந்துடன் இணைந்து பணியாற்றுகின்றனர். அவர்கள் அசாத்தியமான பணியை செய்து வருகிறார்கள், அவர்களின் சேவைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்." எனக் குறிப்பிட்டு உள்ளார். - https://twitter.com/POTUS/status/1507391970443943946?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1507391970443943946%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.abc.net.au%2Fnews%2F2022-03-26%2Fbiden-visits-us-troops-in-poland-stationed-near-ukraine-border%2F100941604

10 லட்சம் அமெரிக்க படைகள் குவிப்பு
நேட்டோ நாடுகளில் இணைய வேண்டும் என்ற உக்ரைனின் விருப்பத்துக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இணங்கியதை அடுத்து ரஷ்யா தனது படைகளை உக்ரைனில் குவிக்கத் தொடங்கியுள்ளது. அப்போதே போலந்து உக்ரைன் எல்லையில் அமெரிக்க படையினர் ஏராளமானோரை அமெரிக்கா குவித்தது. ஐரோப்பியாவில் கடந்த சில பத்து ஆண்டுகளில் 10 லட்சம் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டது இதுவே முதல் முறை.

உக்ரைன் அகதிகளுக்கு உதவுவது குறித்து ஆலோசனை
போலந்து 2 லட்சம் உக்ரைன் அகதிகளை ஏற்றுக்கொண்டு இருக்கும் நிலையில், அவர்களுக்கு தேவையான உதவிகளை ஐரோப்பிய யூனியனும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வழங்கி வருகின்றன. போலந்தில் 2 நாள் தங்கி இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போலந்து அதிபர் ஆந்திராஸ் டுடாவை சந்தித்து பேச உள்ளார்.
Recommended Video

பலத்த பாதுகாப்பு
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக அதனை சுற்றியுள்ள நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், போலந்து சென்றுள்ள அமெரிக்க அதிபருக்கு ரஷ்யாவால் அச்சுறுத்தல் வரலாம் என்பதால் ஏவுகணை தாக்குதல்களை தடுக்க அதனை வழிமறித்து அழிக்கும் தொழிட்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போலந்தில் ஜோ பைடனின் ஒவ்வொரு நகர்வும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு அதன் அடிப்படையில் அவரது பயணங்கள் வகுக்கப்பட்டு இருக்கின்றன.












Click it and Unblock the Notifications