கோணிப்பைக்குள்ளிருந்து.. தலையை வெளியே எட்டி பார்த்து.. பரிதாப நாய்கள்.. பதற வைக்கும் நாகாலாந்து ஷாக்
நாகலாந்தில் நாய்க்கறி விற்பனைக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது
கோஹிமா: பாவம்.. கோணிப்பைக்குள் திணித்து, அதன் வாயையும் கட்டி.. கொன்று விற்பதற்காக ஒருவர் நாயை மார்க்கெட்டுக்கு கொண்டு போனார்.. இந்த ஒரு போட்டோதான் ஒரு மாநிலமே அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட காரணமாக இருந்தது என்றால் நம்ப முடிகிறதா?
Recommended Video
சீனாவில் அன்று வூஹானின் மீன் மார்க்கெட்டில் இருந்து கிளம்பி வந்த இந்த கொரோனா, இன்று உலக மக்களை தன் பிடியில் வைத்து கொண்டு ஆட்டி படைத்து வருகிறது.

இந்த பீதியால் சிக்கன், மட்டனை எல்லாம் நம்மால் சாப்பிட கூட முடியாத பயத்தை 2 மாசத்துக்கு முன்பு இந்த கொரோனா தந்துவிட்டது.. ஆனால் எங்கே இந்த தொற்று ஆரம்பித்ததோ, அவர்கள் வழக்கம்போல் வவ்வால், பூனை என்று கடையை விரித்து கொண்டு விற்பனை செய்து வருகிறார்கள்.
எனினும், உலக நாடுகளில் இந்த அச்சம் இன்னும் விலகவில்லை. அந்த வகையில், நாகலாந்தில் நாய்க்கறிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது..
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றுதான் நாகலாந்து.. இங்கு வழக்கமாக நாய்க்கறியைதான் சாப்பிடுவார்கள்.. இவர்களது பிரதான உணவே இதுதான்.. இதை சில குறிப்பிட்ட மக்கள் இங்கு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
மேற்கு வங்காளம் உள்பட மற்ற மாநிலங்களில் இருந்து நாய்கள் இதற்காகவே நாய்கள் இங்கு பிரத்யேகமாக இறக்குமதி செய்யப்படும்.. அதாவது ஒரு நாய் 50 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குவார்கள். தற்போது கொரோனா பாதிப்பினால் இதெல்லாம் நிறுத்தியிருப்பார்கள் என்று நினைத்தால், இந்த நாய்களை நாகலாந்தில் உள்ள திமாப்பூர் என்ற மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
நாய்களை விற்கும் போட்டோவும் சோஷியல் மீடியாவில் பரவவும், இதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.. ஒரு கோணிப்பையில் நாயை உள்ளே போட்டு, அதன் வாயையும் கட்டி வைத்திருந்தனர்.. அந்த நாய் கத்த கூடமுடியாமல், கோணிப்பைக்குள் இருந்து கலக்கத்துடன் எட்டிப் பார்க்கிறது.. இப்படி சாக்கு பையில் கட்டி ஒருவர் சந்தைக்கு எடுத்து போகும் போட்டோவை பார்த்ததுமே, நாய்க்கறிக்கு தடை வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.
அதுமட்டுமில்லை, உடனடியாக, விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளும் மாநில அரசுகளுக்கு பல்வேறு மனுக்கள் வரிசையாக அனுப்பப்பட்டன.. இதற்கு பிறகுதான், நாய்க்கறி விற்பனைக்கு நாகலாந்து அரசு தடையை அறிவித்துள்ளது... நாய் இறைச்சி ஏற்றுமதி, நாய் இறைச்சி சந்தைகள், சமைக்கப்பட்ட நாய் இறைச்சி உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் அரசு தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications